அரசியலுக்கு வரும் நடிகர் சிம்பு ரசிகர்களை ஒன்றுத்திரட்டுகிறார்

லட்சிய திமுக என்ற கட்சியை நடத்தி வரும் நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், அவ்வபோது தமிழக அரசியல் குறித்து தனது விமர்சனங்களையும் தனது கட்சியின் சார்பில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார். இருந்தாலும், தேர்தலில் மட்டும் அவர் சில ஆண்டுகளாக போட்டியிடவில்லை.

 

இந்த நிலையில், தனது மகன் நடிகர் சிம்புவை அரசியலில் களம் இறக்க டி.ராஜேந்தர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர், சிம்பு ரசிகர்களை ஒன்றுத்திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் டி.ராஜேந்தரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “சிம்பு ரசிகர்களை ஒன்றுத்திரட்டப் போகிறோம். காத்திருந்து பாருங்கள்” என்றும் மட்டும் பதில் அளித்தார்.

 

ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலில் ஈடுபடுவதை போல வளரும் நடிகரான விஷால் கூட அரசியலில் ஈடுபட்டுள்ளார். நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி அணியில் போட்டியிட்ட நடிகர் சிம்பு தோல்வியை தழுவிய நிலையில், தற்போது விஷாலுக்கு போட்டியாக அரசியலில் ஈடுபட உள்ளார் என்று கூறப்படுகிறது.