திருமணமான ஹீரோவுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த மெர்சல் ஹீரோயின்

ஹைதராபாத்: அவே பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நித்யா மேனன் நானிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.

புதுமுகம் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம் அவே. நடிகர் நானி தயாரித்துள்ள இந்த படம் வரும் 16ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.

நானி 
புகழ்ச்சி

விழா மேடையில் பேசிய நானி நித்யா மேனனை புகழ்ந்தார். நித்யா மேனனின் கதாபாத்திரம் நிறைய சஸ்பென்ஸ் கொண்டது. அவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது என்றார் நானி.


நித்யா 
முத்தம்

மேடையில் நானி தன்னை புகழ்ந்து பேசுவதை பார்த்த நித்யா மேனன் அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்து நன்றி என்றார். அது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

 

நடிகைகள் 
ஹீரோ

ஒரு நடிகை நடிகருக்கு பறக்கும் முத்தம் கொடுப்பது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் கூச்ச சுபாவம் உள்ள நித்யா பறக்கும் முத்தம் கொடுத்தது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வதந்தி 
திரையுலகம்

நித்யா நன்றி தெரிவிக்க நானிக்கு பறக்கும் முத்தம் கொடுக்க அவர்களுக்கு இடையே ஏதோ இருக்கிறது என்று ஆளாளுக்கு தேவையில்லாத பேச்சு பேசத் துவங்கிவிட்டனர்.