தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்கள் இவங்கதான்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவின் வர்த்தகப் போக்கை நிர்ணயிக்கும் நடிகர்கள் மாறிக்

கொண்டே இருக்கிறார்கள், ரஜினி ஒருவரைத் தவிர. ரஜினியின் இடம் என்பது அத்தனை

சுலபத்தில் யாராலும் தொட முடியாதது. அதை விட்டுவிடுவோம்.

மற்ற முன்னணி நடிகர்கள் யாரென்று பார்ப்போம்....

கடந்த 2017-ம் ஆண்டில் வெளியான விஜய்யின் படம் பைரவா தோல்வியைத் தழுவினாலும்,

அவருக்கு மவுசு குறையவில்லை. அடுத்து வந்த மெர்சலுக்கு கிடைத்த மெகா வெற்றி தளபதியை

இன்னும் சிகரத்தில் ஏற்றிவிட்டிருக்கிறது. இன்றைய தேதிக்கு விஜய்தான் தமிழ் சினிமாவின் டாப்

ஹீரோ. நோ டவுட்!

அடுத்து முருகதாஸ் படம் கையிலிருக்கிறது. ஏகப்பட்ட இயக்குநர்கள் தளபதி கால்ஷீட்டுக்காக

வரிசையில் காத்திருக்கிறார்கள். கதைத் தேர்வில் மட்டும் இன்னும் கவனம் தேவை விஜய்க்கு.

இந்த ஆண்டும் அவர் கொடிதான் பறக்கும் போலிருக்கிறது.

போன வருஷம் அஜித்துக்கு ஒரு படம் தான். விவேகம். விவேகமற்ற கதையால், அஜித்தின்

அத்தனை உழைப்பும் வீணாய்ப் போனது. ஆனாலும் அஜித் ரொம்பவே பாஸிடிவ் சிந்தனை

கொண்டவர். அந்தத் தோல்வியைத் தந்த அதே இயக்குநர், தயாரிப்பாளருக்கு அடுத்த படம்

பண்ணுகிறார். காரணம் இந்தக் கதை மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை.

சிவாவுடன் அவர் இணைந்துள்ள இந்த நான்காவது படம் வேதாளம் மாதிரி மாஸ் மசாலா.

நிச்சயம் பைசா வசூல் ஆகும் என்கிறார்கள்.

தல உடனடியாகச் செய்ய வேண்டியது புதிய முயற்சிகளில் இறங்க வேண்டியதுதான்.

விஜய், அஜித்துக்கு அடுத்து சிவகார்த்திகேயனா... என்ற சின்ன ஷாக் சிலருக்கு இருக்கலாம்.

ஆனால் அதுதான் நிஜம், இன்றைய தேதிக்கு. சிவகார்த்திகேயன் ஓடுகிற குதிரையாகிவிட்டார்.

வேலைக்காரன் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிட்டது. அடுத்து வரும் பொன்ராம்

படத்துக்கு ஏக கிராக்கி.

சொந்தப் படம்தான் சேஃப் என அந்த ரூட்டிலேயே பயணிக்கிறார் சிவா. சில நல்ல

இயக்குநர்களுக்காக இந்த பாலிசியைத் தளர்த்தலாமே!

இன்றைய தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் தனுஷ். ரசனையான கலைஞன். அந்த

ரசனையை முடிந்த வரை தன் படைப்புகளில் தரப் பார்ப்பவர். அடுத்தடுத்த அவரது படங்களின்

லைன் அப், 2018-ம் ஆண்டு அவர் கைவசம்தான் என்பதைச் சொல்கிறது.

குறை சொல்ல ஒன்றுமில்லை. இப்போதுள்ள நிலையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும்.

2017-ல் விக்ரம் வேதா என்ற ப்ளாக்பஸ்டர், கவண், கருப்பன் என இரு வெற்றிப் படங்களை அசராமல் தந்தவர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டும் அவருக்கு நல்ல தொடக்கம்தான். அடுத்து ஜூங்கா, 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என கலவையான படங்கள் இந்த ஆண்டு ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இன்றைய சினிமாவில் விஜய் சேதுபதியின் முடிவுதான் புத்திசாலித்தனமானது. ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்கள். ஒன்றிரண்டு சுமாராகப் போனாலும் நான்கைந்து ஹிட்டடிக்கலாம். இன்னும் 5 ஆண்டுகளுக்கு இதைத் தொடருங்கள் விஜய் சேதுபதி... நல்ல தயாரிப்பாளர்கள் பிழைத்துக் கொள்வார்கள்!