பிரபல நடிகை கொடுத்த அடி வலியால் துடித்த வடிவேலு

வடிவேலு:

நடிகர் வடிவேலு என்று சொன்னாலே பலருக்கும் சிரிப்பு வரும். அப்படி பலரைய்யும் விழுந்து விழுந்து தன்னுடைய காமெடியால் சிரிக்க வைத்தவர் வைகை புயல் வடிவேலு. இவர் தமிழ் சினிமாவின் காமெடி சுரங்கம் என்று கூட கூறலாம். 

ஹீரோ அவதாரம்:

காமெடியனாக பல முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து வந்த இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல் ஏற்படக் காரணமாக அமைந்தது இவரின் ஹீரோ ஆசை என்று கூறலாம். இவர் முதல் முதலாக ஹீரோவாக நடித்த '23ம் புலிகேசி திரைப்படம்' இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து 'தெனாலி ராமன்', 'எலி' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவே தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார். ஆனால் இந்த படங்கள் வெற்றிப்பெறாமல் தோல்வியை தழுவி இவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

 

மீண்டும் காமெடிக்களம்:

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் 'கத்தி சண்டை', மற்றும் 'சிவலிங்கா'ஆகிய படங்களில் காமெடியனாகவே என்ட்ரி ஆனார்.

 

நடிகையிடம் வாங்கிய கும்மாங்குத்து:

வடிவேலு நடித்த 'சிவலிங்கா' படத்தில் நடிகை ரித்திகா சிங் தான் ஹீரோயின்னாக நடித்தார். ஹாரர் படம்மான இந்த படத்தில் இயக்குனர் வாசு ரித்திகா சிங் வடிவேலுவை அடிப்பது போல் ஒரு சீன் எடுத்துள்ளார்.

 

எப்போதும் போல இந்த சீன் எடுக்க தயாராகி வடிவேலு சென்றுள்ளார். மேலும் மொழி பிரச்சனைக் காரணமாக ரித்திகா சிங்கிடம் வடிவேலு பேசியது கூட இல்லையாம். அதனால் ரிதிக்கா உண்மையில் ஒரு குத்துச்சண்டை வீராங்னை என்பது அவருக்கு தெரியாமல் இருக்க ரித்திகா இவரை ஒரு அடி அடித்துள்ளார். பின் சொல்லவா வேண்டும் வடிவேலுவின் நிலமையை 5 நாள் வலியால் துடிதுடித்தாரம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலுவே கூறியுள்ளா