தீ விபத்தை தொடர்ந்து என்ன நடக்கிறது மீனாட்சி அம்மன் கோவில் உள்ளே ஏதோ ஆபத்து

தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில் தளங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் அருகே ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து மின்கசிவு காரணமாக நேரிட்டது என்று கூறப்பட்டாலும் இதற்கான சரியான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.

இதில் ஏராளமான கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரவு 11 மணியளவில் தொடங்கிய தீ அணைக்கும் பணி, ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தை தொடர்ந்து அங்கு குவிந்த  இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள், கோயிலுக்குள் இருக்கும் கடைகளால் தான் தீவிபத்து ஏற்பட்டது என்று கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தீ விபத்தின் உக்கிரம் இவ்வளவு தீவிரமாக இருப்பதால், இது திட்டமிட்ட சதியா..? இல்லை தவறுதலான முறையில் தீ பிடித்ததா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலையில் அங்கு கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று கோஷமிட்டனர்.

ஆயிரங்கால் மண்டபம் தீ விபத்தில் முழுமையாக எரிந்து உள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது கோவில் நிர்வாகம் பக்தர்களை தரிசிக்க உள்ளே அனுமதித்தாலும், தீ விபத்தின் அச்சம் காரணமாக பலரும் உள்ளே செல்ல தயங்கி வருகின்றனர்.