தேசிய கீதத்தை மாற்றுகிறது கனடா அரசு

தேசிய கீதம் என்பது ஒரு நாட்டின் பெருமைக்குரிய விஷயம். பல நாடுகளில் தேசியகீதம் புனிதம் நிறைந்ததாக பாதுகாக்கப்படுவதோடு, தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய கீதத்தில் உள்ள ஒருசில வார்த்தைகளை மாற்ற கனடா முடிவு செய்துள்ளது. கனடாவின் தேசிய கீதத்தில் Sons என்று ஆங்கிலத்தில் ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு வார்த்தை உள்ளது. இந்த வார்த்தைக்கு பதிலாக 'all of us command' என்று எந்த பாலினத்தையும் குறிப்பிடாமல் பொதுவாக இருக்கும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான மசோதா கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஜெனரல் ஜூலி பெயட்டி அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்த மசோதாவில் கையெழுத்திட்டவுடன் கனடாவின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.