மல்லிகை மொட்டு மனசை தொட்டு காதல் மலர் மல்லிகை #Astrology

சென்னை: ஜோதிட ரீதியாக, சுக்கிரன்தான் காதலுக்கு உரிய கிரகம். மல்லிகைப் பூ இருக்கும் இடத்தில் வீசும் மணம் காதலர்களின் மனதை மயக்கும். எந்த ஒரு இறுக்கமான சூழலையும் இளக வைத்து விடும் எனவேதான் காதலுக்குரிய மலர் ரோஜா அல்ல மல்லிகை என்கின்றனர்.

இன்றைக்கு காஸ்ட்லியாக உள்ள பூ என்றால் மல்லிகைப் பூ தான். மணக்க மணக்க மல்லிகைப் பூவை தலையில் சூடியவர்கள் பணக்காரர்கள் என்று கூட ட்விட்டரில் கமெண்ட் போடுகின்றனர்.

வெண்மை நிறம் கொண்ட மல்லிகைப் பூவிற்கு சுக்கிரன் காரகனாகிறார். மல்லிகை பூவின் மணமானது காமத்தை தூண்டும் ஆற்றல் கொண்டது. இன்னும் இரு வாரத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சுக்கிரன் பற்றியும், காதல் மலர் மல்லிகைப் பற்றியும் படிங்க மக்களே!

சுக்கிரன் பளபளப்பான வெள்ளை நிறத்தை உடையவர். மகாலஷ்மி இவரது அம்சம். எங்கெல்லாம் சுகம் உண்டோ அங்கெல்லாம் சுக்கிரனின் ஆதிக்கம் உண்டு. மன்மத லீலைகளுக்கு சொந்தகாரர் காமக்காரகன் என்ற பெயரும் இவருக்குண்டு.

வெள்ளிகிழமை இவரது ஆதிக்க நாளாகும். வெள்ளி இவரது உலோகம். வாசனை திரவியம் வெண்தாமரை, பெண்மோகம், மொச்சை, தயிர், பால் அண்ணம், இவற்றிற்கு காரகனாவார். ஆடம்பரத்தின் அதிபதி சுகங்களின் நாயகன் சுக்கிரன்.

திருமணத்தில் மல்லிகைப்பூவின் பங்கு முக்கியமனது. திருமணம் முடிந்தவுடன் சாந்திமுகூர்த்தத்தில் மஞ்சம் முழுவதும் மல்லிகை பூவை தூவி மணக்க செய்கிறார்கள். திருமணம் கலக்க இல்லறம் இனிக்க சுக்கிரன் மல்லிகை பூவாய் மணம் வீசி இனிய உறவுக்கு உதவி செய்வார்.

மணமான பெண்கள் மாலை நேரத்தில் தலைவாரி மல்லிகை சூட்டி கணவனின் வருகைக்காக காத்திருப்பார்கள். கணவன் டென்சனாக வீடு திரும்பினாலும் மல்லிகை பூவின் மணம் அத்தனை களைப்பையும், டென்சனையும் போக்கி ரிலாக்ஸ் செய்யும்.

இன்றைய சூழ்நிலையில் மல்லிகைப்பூ ரொம்ப காஸ்ட்லிதான். ஒரு முழம் 100 ரூபாய்க்கு கூட விற்பனையாகலாம். ஒரு கிலோ மல்லிகைப் பூ 3 கிராம் தங்கத்தின் விலைக்கு விற்பனையாகிறது. காதலுக்கு காசை பார்த்தா முடியுமா? மணக்க மணக்க மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்து காதலி மனசை கூல் பண்ணுங்க பாய்ஸ்.