இன்றோடு ஏர்செல்லை முழுவதுமாகவே ஊத்தி மூடிட்டாங்களா என்னாச்சோ ஏதாச்சோ பதறும் மக்கள்

இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் அனைத்து கைபேசிகளிலும் ஏர்செல் நெட்வொர்க் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

ஒருவேளை ஆதார் எண் இணைக்காமல் விட்டதால், துண்டித்து விட்டார்களோ என்று மக்கள் கூட்டம் ஏர்செல் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர்.

இறுதியாக தொழில்நுட்ப கோளாறால் தான் அனைத்து பகுதிகளிலும் தடைபட்டது என்று வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஏர்செல் நெட்ஒர்க் சேவையானது ஆறு மாநிலங்களில் நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது.

முன்னதாக பிரபல  ஏர்செல் நிறுவனம் தனது சேவையை குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் ஜனவரி 30 முதல் அதிரடியாக நிறுத்தவுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து இருந்தது.

ஜியோ நிறுவனம் களத்தில் இறங்கியது முதல் வோடபோன், ஐடியா போன்ற பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கைவசம் வைத்துக்கொள்வதற்காக கடும் போட்டியை சந்தித்தது.

இருப்பினும் ஜியோவின் இலவச டேட்டா மற்றும் இலவச வாய்ஸ் கால்ஸ் என்று அதிரடி சலுகைகளால் பெரும்பாலானோர் மற்ற நெட்வொர்க் சேவையிலிருந்து ஜியோவிற்கு மாறினர்.

இந்த நிலையில், ஏர்செல் நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள பல்வேறு அதிரடி சலுகையை வாரி வழங்கியது.

இதனால் இறுதியில் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஏர்செல் நிறுவனம் குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்தவுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

அந்த ஆறு மாநிலங்களாவது, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் தான் ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது.

இந்த பகுதிகளில் உள்ள 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சேவை நிறுத்தப்படுவதால் இந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பிற நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களிலுள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை மார்ச் 10 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அதுவரையிலும் ஏர்செல் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இம்மாநிலங்களில் சேவை துண்டிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் ஏர்செல் சேவை எந்த விதத்திலும் பாதிப்பு அடையாது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் மற்ற மாநிலங்களில் சேவை நிறுத்தப்பட்டதால், சில மாறுதல்கள் நடைபெற்று வருகிறது. அதனால் தான் இன்று ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.