எல்லாருமே இப்படி பண்ணுறாங்க குமுறிய பிக்பாஸ் பிரபலம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று கூறியவர் நடிகர் வையாபுரி.

பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் ஒவ்வொரு பிரச்னையின் போதும் இவர் இப்படியேதான் கூறினார். ஆனால் அவரோ, 80 நாட்களுக்குப் பிறகுதான் அங்கிருந்து வெளியேறினார். 

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்றவர்கள் அனைவரும் நான் போன் செய்தால் எடுப்பதே இல்லை என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார் வையாபுரி.

கிட்டத்தட்ட இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் 80 நாட்கள் வரை இருந்ததால், ஒருவேளை டைட்டிலை வென்றுவிடுவாரோ என்று அனைவரையும் நினைக்க வைத்துவிட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவர் தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை தற்போது உணர்ந்து கொண்டதாகப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நிறைய பேருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்து சினிமாவில் ஜெயிப்பார்கள். அவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு வாய்ப்பாக அமைந்த மேடை தான் பிக்பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் சினிமாவில் நல்ல பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில், கலகலப்பு 2 படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் நடிகர் வையாபுரி பேசும்போது அப்படியே பிக்பாஸ் பற்றியும் பேசியிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் இருக்கும் போது பலரும் அண்ணே... நீங்க எல்லாம் அங்க போனது இல்லையா, வெளியே போனதும் ஒரு குடும்பமாக நாம் ஊர் சுற்றுவோம் என்றெல்லாம் கூறினர். ஆனால் தற்போது வரை அதனை யாரும் செய்யவில்லை. நான் தொலைபேசியில் அழைத்தாலும் கூட யாரும் எனது போன் காலை எடுப்பது இல்லை என்று மிக வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.