மோடியின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது எங்கு நின்றாலும் ஏமாற்றம் ஜோதிடா் சொன்ன அதிர்ச்சி தகவல்

இன்று, பிப்ரவரி 1-ஆம் தேதி, ஆளும் கட்சியான பா.ஜ.க. மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது. மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் இது என்பதால், எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் அதிகம் கிளம்பும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனா். 

2014-ஆம் ஆண்டு, பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்று, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மோடி பிரதமா் ஆனார். மற்ற பிரதமா்களை விட, வித்தியாசமாக ஏதாவது செய்து, இந்தியாவை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வார் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

அவா் பிரதமராக பதவியேற்ற நாள் முதல், அவா் இந்தியாவில் இருந்த நாட்களை விட, வெளி நாட்டுச் சுற்றுப் பயணங்களில் செலவழித்த நாட்கள் தான் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அயல் நாடுகளில் இருந்து, ஏராளமான அளவில், அன்னிய முதலீட்டைப் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்ப்பும் பொய்யானது.

மாறாக, திடீரென்று, பண மதிப்பீட்டை இழக்கச் செய்து, இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இதனால், பலவீனமடைந்த சிறு தொழில்கள் எல்லாம் நசியத் துவங்கின. தமிழக விவசாயிகள் தங்கள் குறைகளைச் சொல்வதற்காக டெல்லியில் தங்கிப் போராட்டம் நடத்திய போது, அவா்களைச் சந்திக்கவேயில்லை.

ஆனால், பிரியங்கா சோப்ராவை மட்டும் பார்க்க எப்படி நேரம் ஒதுக்கினார், போன்ற விமா்சனங்களுக்கும் ஆளானார். ஜி.எஸ்.டி. வரி விதித்து, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வரி செலுகத்த வேண்டிய கட்டாயத்தில் மக்கள் அனைவரும், இந்த ஆட்சி மாற வேண்டும், என்ற எண்ணத்தில் உள்ளதை உளவுத் துறை மூலம் அறிந்த மோடி அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது போதாதென்று, அவரது ஆஸ்தான ஜோதிடா், மோடியின் ஜாதகத்தைக் கணித்து விட்டு,  2019-ஆம் ஆண்டு தேர்தல் நடந்தால், மோடிக்கு விரயமும், கெட்ட பெயரும் தான் ஏற்படும். ஏமாற்றத்திற்கு ஆளாக நேரிடும், என்று கூறி அவரை அதிர வைத்திருக்கிறாராம்.

2019-ஆம் ஆண்டுக்குப் பதிலாக, 2018-ஆம் ஆண்டிலேயே தேர்தல் நடந்தால், மோடிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக, ஒரு மாற்று வழியையும் கூறி இருக்கிறாராம் ஜோதிடர். அதனால், குழப்பத்திற்கு உள்ளான மோடி,  2018-ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் தேர்தலை எப்படியாவது நடத்தி விட வேண்டும், என்று தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

ஏற்கனவே, கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் பல  நிறைவேற்றப் படாமல் இருக்கும் பட்சத்தில், எதைச் சொல்லி, மக்களிடம் இனி வாக்கு கேட்பது என்றும் யோசனையில் இருக்கிறாராம். கடந்த தேர்தலின் போது, கணிசமாக உயர்ந்து இருந்த பா.ஜ.க.வின் வாக்கு வங்கியும் தற்போது, கணிசமான அளவில் குறைந்திருக்கிறது.

மேலும், இந்தியர் அனைவரின் கணக்கிலும், ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதாக, கடந் தேர்தலின் போது, மோடி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால், அது பற்றி, இப்போது யாருமே வாய் திறப்பதில்லை, என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

மோடி வெளி நாடு சுற்றுப் பயணத்திற்குச் செலவான தொகையைக் கொண்டு, ஒரு இடைக்கால பட்ஜெட்டே போட்டிருக்கலாம், என்று டெல்லியில் பல அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எனவே, பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடக்க இருக்கும் பட்ஜெட் தான், பா.ஜ.க.வின் கடைசி ஆயுதம் என்றும் பலர் விமர்சித்திருக்கிறார்கள். அதனால், இந்த பட்ஜெட், இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கவரும் வகையில் தான் பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

என்ன செய்யப் போகிறார் மோடி? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.