நேற்று சந்திர கிரகணத்தன்று சைலண்டாக நம் மக்கள் செய்த காரியம்

நேற்று சந்திரகிரகணத்தை நிகழ்ந்ததை முன்னிட்டு மூட நம்பிக்கைகளை களையும் விதமாக  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிலாப் பொங்கல் நிகழ்வை நடத்தினர்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அரிய  நிகழ்வு நேற்று வானில் நடந்தது.இருந்தாலும் ஆன்மீகத்தின் படி இது ஆபத்தானது என்று கூறி பலரும் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி விட்டனர்.

ராகு,கேது என்ற என்பவற்றுடன் இந்தச் சந்திரகிரகணத்துடன் ஒப்பிட்டு, வெளியில் நடமாடக்கூடாது.

தண்ணீர்கூட அருந்தக்கூடாது என்ற கட்டுப்பாடை விதித்தனர். கிரகணம் முடியும்வரை பிரபல கோயில்களின் நடை சாத்தப்பட்டிருக்கும்.

சந்திரகிரகணம் முடியும் வரை பல ஊர்களில் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதுபோன்ற நம்பிக்கைகளை உடைக்கும் விதமாக நேற்று நிலாப்பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை ஐந்து மணிக்கு மேல் நிலாப் பொங்கல் வைக்கப்பட்டது.

பின்னர் பெரிய நிலா வெளிச்சத்தில் எல்லோருக்கும் நிலாப் பொங்கல் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சந்திரகிரகணத்தைப் பார்ப்பதற்கு வசதியாக டெலஸ்கோப்பும் வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், சந்திர கிரகணம், சூரியகிரகணம் வந்துவிட்டாலே நம்ம ஊரு தெருக்களில் ஆள் நடமாட்டம் இருக்காது.

வீடுகளில் பலரும் கிரகணம் முடியும்வரை சமைக்கமாட்டார்கள். இன்னும் பலர் யாரிடமும் பேசாமல் மௌன விரதம் இருப்பார்கள்.

அதன் பின்னர், கிரகணம் முடிந்ததும் வீட்டைக் கழுவிவிட்டு, தாங்களும் குளித்துவிட்டு, பூஜை விஷயங்களை எல்லாம் நிறைவேற்றிவிட்டு அதன்பிறகே சமைக்க ஆரம்பிப்பார்கள்.

இந்த அளவிற்கு பதற்றப்படும் அளவிற்கு சந்திர கிரகணத்தால் ஆபத்தான நிகழ்வுகள் ஒன்றும் ஏற்பட்டுவிடாது.

எப்போதும் உள்ள நாள்கள் போன்றதுதான் இதுவும். கிரகணம் நேரத்தில் வெளியே வரக்கூடாது. அப்படி வந்தால் குடும்பத்துக்கு ஆகாது. தோஷம் பிடித்துவிடும் என்று கூறப்படுவதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள்.

அவற்றை உடைக்கும் முயற்சியாக இந்தச் சந்திரகிரகணம் பொங்கல் நிகழ்வை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று நடத்தியிருக்கிறோம்' என்று கூறி உள்ளார்.

மூட நம்பிக்கை என்று கூறினாலும், நம் முன்னோர்களின் சில செயல்களில் அறிவியலும் இருக்கிறது, பொதுவாக வெளியில் வர வேண்டாம் என்று கூறுவதற்கு காரணம், மன நிலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் தான்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சமயத்தில் ஆக்ரோசமாக காணப்படுவார்கள். ஆனால் இது அறிவியல் ரீதியாக எப்பாடி என்று நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இதன் காரணம் என்று அறிந்து அன்றைக்கே வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.