பிப்ரவரியில் வெடிக்கப்போகும் பிரளயம் உச்சகட்ட கோபத்தில் டெல்லி உதறலில் எடப்பாடி அண்ட் கோ

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே தமிழ முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி தலைமையிலான அரசு,தொடந்த்து மக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.

அரசின் நிதிச்சுமையை காரணம் காட்டி,ரேஷனில் வழக்கப்பட்டு வந்த சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு,உளுத்தம்பருப்பு நிறுத்தம்,பஸ் கட்டண உயர்வு என சாமானிய  மக்கள் மீது கடும் நிதிச்சுமையை ஏற்றிவருகிறது.

அதேவேளையில்,எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை இருமடங்கு உயர்த்தியது.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பேரில் மக்கள் வரிப்பணத்தை தண்ணிபோல் செலவழித்து வருகிறது.இதனால் கொதித்துப்போயுள்ள மக்கள் எப்படா இந்த ஆட்சி ஒழியும் என வெளிப்படையாக பேசிவருகின்றனர்.

இதற்கிடையே பேருந்து கட்டண உயர்வை திரும்ம பெற வலியுறுத்தி தமிழக முழுவதும்,பொதுமக்களும்,மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.அதேபோல் தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர்.இதனால் தமிழக போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. 

இந்தநிலையில்,இதுகுறித்து உளவுத் துறை மூலமாக டெல்லிக்குப் போன ரிப்போர்ட்டில், ‘தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. பி.ஜே.பி இந்த ஆட்சியைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தபடி இருப்பது தமிழக மக்களிடம் பி.ஜே.பிக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவருகிறது. இப்படியே போனால், தமிழகத்தில் பி.ஜே.பி மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. 

ஏற்கனவே அதிதிருப்தியில் இருந்த மோடி, அதைப் பார்த்ததும் மேலும் டென்ஷன் ஆனதாகச் சொல்கிறார்கள்.இதனைத்தொடர்ந்து எடப்பாடி அரசு மீது நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கு குறித்தும் விவாதம் போயிருக்கிறது.

முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்ததால்,தகுதிநீக்கம் செய்யப்பட்ட  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும், தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, ஓ.பி.எஸ்.மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு, குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தி.மு.க சார்பில் தொடரப்பட்ட வழக்கு என அனைத்திலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். 

எப்படியும் அணைத்து தீர்ப்புகளும் எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் வரும். அப்படி வரும் போது அதையே காரணம் கட்டி எடப்பாடி அரசின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என மோடிக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.

நடவடிக்கை என்றால் எதுவரை போகலாம் என சிலர் கேட்டார்களாம். இந்த ஆட்சி இருக்கக் கூடாது. ஆளுநரைப் பயன்படுத்தி இப்போதைக்கு நிர்வாகம் செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆலோசனை சொன்னவர்கள். ஆக, தமிழகத்தில் பிப்ரவரியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.