தலயின் அதிரடி முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

விசுவாசம் அப்டேட்

வீரம், வேதாளம், விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நான்காவது முறையாக தல அஜித், இயக்குநர் சிவாவுடன் இணைகிறார். இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான அப்டேட் பற்றி இயக்குநர் சிவா தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இல்லாததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். இந்நிலையில், விசுவாசம் படத்திற்கான அப்டேட் மட்டும் இல்லாமல் அஜித் பற்றிய ஒரு புது தகவலும் கிடைத்துள்ளது ரசிகர்களை ஆனந்த கூத்தாட செய்திருக்கிறது.

படத்தின் ஷூட்டிங்

அதன்படி ஜூலை மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க சிவா திட்டமிட்டுள்ளதால், விசுவாசம் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 22ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம் சிவா.

தல தளபதி சூர்யா

இதிலிருந்து தீபாவளிக்கு ரசிகர்கள் ”தல தீபாவளி தல தீபாவளி” என பாட்டு பாட தயாராகி விடுவார்கள்.மேலும் தீபாவளிக்கு விஜய் 62 மற்றும் சூர்யா 36 படங்களை ரிலீஸ் செய்ய திட்டுமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த ஆண்டு தீபாவளிக்கு தல, தளபதி, மற்றும் சூர்யாவின் படங்கள் ரிலீசாகின்றன.இது ஒரு புறம் மகிழ்ச்சியை தந்தாலும் வசூல்பாதிக்கும் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

ஆண்டுக்கு ஒரு படம்

மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிக்க  தல முடிவு செய்துள்ளாராம். படப்பிடிப்பை சீக்கிரம் நடத்தி முடிக்க இதுவும் ஒரு காரணமென்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.