ப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக ப்ரியங்கா சோப்ராவுக்கு பெரிய பட வாய்ப்புகள் வருவது இல்லையாம்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், ஷாருக்கானுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக முன்பு ஒரே பேச்சாக கிடந்தது. இதனால் ஷாருக்கானுக்கும், அவரின் மனைவி கவுரிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகின.

அதன் பிறகு ஷாருக்கானும், ப்ரியங்காவும் பிரிந்துவிட்டனர்.

காதல் முறிவுக்கு பிறகு ஷாருக்கானும், ப்ரியங்கா சோப்ராவும் சேர்ந்து நடிப்பது இல்லை. ஏன் பொது இடங்களில் பார்த்தால் கூட ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிடுகிறார்கள்.

ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ராவுக்கு பாலிவுட்டில் பெரிய பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதற்கு ஷாருக்கானின் மனைவி கவுரி ஒரு வகையில் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஆமீர் கான், ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆமீர் கான் படத்தில் இருந்து விலகியதால் ஷாருக்கான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஷாருக்கானை பரிந்துரை செய்ததே ஆமீர் கான் தான்.

ஆமீர் கான் விலகி ஷாருக்கான் ஒப்பந்தம் ஆனதால் வேறு வழியில்லாமல் ப்ரியங்கா சோப்ரா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். இது ப்ரியங்காவின் நட்பு வட்டாரத்தை கோபம் அடைய வைத்துள்ளது.

டான் 2 படத்தில் ஷாருக்கானும், ப்ரியங்கா சோப்ராவும் நடித்தனர். இந்நிலையில் டான் 3 படத்திற்கு வேறு ஒரு ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.