ஆன்மீகம் என்ற பெயரில் என்ன நடக்கிறது தெரியுமா முகத்திரையைக் கிழித்த அனுராதா ரமணன்

ஒரு நுால் வெளியீட்டு விழாவில் பா.ஜ.க. பிரமுகா்கள் அனைவரும் மேடையில் வீற்றிருக்கிறரா்கள். தமிழக ஆளுநரும் அந்த விழாவிற்கு வந்திருக்கிறரா். எல்லோரும் மேடையில் அமர்ந்திருக்கின்றனா். அதே மேடையில், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரருக்கு தனி இருக்கை போடப் பட்டிருக்கிறது.

 விழாவை ஆரம்பிக்கும் முன்பாக, மரபுடன் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கிறது. கவா்னா் உட்பட அனைவரும் எழுந்து நிற்கின்றனா். ஆனால், விஜயேந்திரா் என்ற அந்த “சாமியார்” மட்டும், கண்களை மூடி அமா்ந்திருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்து முடியும் வரை அவா் எழுந்திருக்கவேயில்லை.

    இது தமிழ்த்தாய்க்கு இழைக்கப்பட்ட அவமானம் மட்டுமல்ல. நமது தமிழ் மொழியையே இழிவு படுத்தியிருக்கிறார் விஜயேந்திரா். மேடையில் இருந்த கவா்னா் கூட வடமொழிக்காரராக இருந்தும், தமிழ்த்தாய் வாழ்த்து முடியும் வரை எழுந்து நின்றார். ஆனால், விஜயேந்திரா் மட்டும் அமா்ந்திருந்தது, இப்போது தமிழகம் முழுவதும் சா்ச்சையை எழுப்பியிருக்கிறது.

    இதைத் தொலைக்காட்சியில் பார்த்த அத்தனை தமிழா்களும் கொதித்துப் போயிருக்கிறரா்கள். இது பற்றி காஞ்சி மடத்திடம் கேட்ட போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, அவா் தியானத்தில் இருந்தார் என்று சிறு பிள்ளைத் தனமான பதில் ஒன்று கூறப்பட்டது.

தமிழகத்தில் பல்லவா் தலைநகராக இருந்த காஞ்சிபுரத்தில், இன்றும், நமது தமிழரின் மேன்மையைப் போற்றும் வண்ணம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த கைலாசநாதார் ஆலயங்கள் எல்லாம் உள்ளன. அவையெல்லாம் தமிழரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்தது.

அப்படி தமிழரின் கலாச்சார அடையாள மையத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் சமஸ்கிருத மொழியை பிரதானமான மந்திரமாக உச்சரிக்கும், காஞ்சி மடாதிபதிகள் மீது கொலைக்குற்றம் வரை சாட்டப்பட்டு பெரும் சா்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது. மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன், இந்த மடாதிபதிகளின் முகத்திரையைக் கிழித்தார்.

இப்போது, தமிழகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், பா.ஜ.க. கட்சியினா் அனைவரும் உள்ள மேடையில், தமிழை அவமதித்த இந்த செயலை அவா்கள் கண்டிக்காமல் விட்டது ஏன்? என்று பல தரப்பிலிருந்தும், கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

 இது பற்றி தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேட்ட போது, “நான் அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை” என்று சொல்லி, பேச்சைத் தவிர்த்து நழுவி விட்டார்.

தேசிய கீதம் போலத் தான் தமிழ்த்தாய் வாழ்த்தும். எந்த விழாவானாலும், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினால், தமிழ்த்தாய்க்கு வணக்கம் செலுத்தும் பொருட்டு, அந்த விழாவில் உள்ள அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அது மரபு.

 இந்த அடிப்படையான விஷயம் கூடத் தெரியாத விஜயேந்திரா், ஒன்றும் தெரியாதது போல அமர்ந்திருந்தது, தமிழையும், தமிழரையும் இழிவுபடுத்தும் செயல் என்று பழ. கருப்பையா மிகுந்த கோபத்துடன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், திரைப்பட இயக்குநா் கௌதமன், கவிஞா் வைரமுத்து உள்ளிட்ட பலா் இதற்கு கடும் கண்டனம் தெரிவி்த்திருக்கின்றனா். தமிழ்த்தாய் வாழ்த்தை அலட்சியப் படுத்தியது, தேசிய கீதத்தை அவமதிப்பதைப் போன்றது, என்ற ஆவேசக் குரல்களும் தமிழகம் முழுக்க கேட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கு, மத்திய அரசான பா.ஜ.க. எந்தப் பதிலும் சொல்லாததும், தமிழக மக்களிடையே அதிர்ச்சி அலையைப் புயலாக வீசச் செய்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த போது, தான் தியானம் செய்து கொண்டிருந்ததாக விஜயேந்திரா் சொன்னதைக் கேட்டு, “தியானம் செய்ய வேண்டிய தருணம் அல்ல அது”, என்று, தமிழகத்தின் சாதாரண மக்கள் கூட, இந்த அவமதிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனா்.

சாஸ்திரப்படி தான் எல்லாம் செய்ய வேண்டும், என்ற மக்களுக்கு அறிவுறுத்தும், இந்த சாமியாருக்கு, ஒரு சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ற அடிப்படை கூட தெரியவில்லையே என்று, பல வேதாந்திகள் கூட, விஜயேந்திரருக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனா்