தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் செய்யவுள்ள விஷயம்

‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சமந்தா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் சீம ராசா என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. கூடவே ‘இன்று நேற்று நாளை’ புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அன்றைய தினமே வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ரெமோ, வேலைக்காரன் படங்களை தயாரித்த 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கிறது.

அதனால் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க, அந்த நிறுவனம் அதன் தயாரிப்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது.