ரஜினிக்கே சவால் விட்ட நடிகர் ராமராஜனின் இன்றைய நிலை என்ன தெரியுமா ஆதரிக்க யாருமின்றி

ஒரு காலத்தில், தமிழ்த்திரை உலகில் அசைக்க முடியாத சக்த்தியாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன்.அன்றைய காலகட்டத்தில் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் மன்னாக திகழ்ந்தவர்.

சினிமா தியேட்டர் ஒன்றில் டிக்கெட் கிழித்து கொண்டிருந்தவர் ராமராஜன், பின்னர் உதவி இயக்குனராக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.அப்போது, நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் ராமராஜனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் அழகப்பன்.

அதனைத்தொடர்ந்து, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் இவருக்கு புகழை பெற்று கொடுத்தன.உச்சத்தில் இருந்த ராமராஜன் நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு,இவரது நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன், பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பி ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.அந்த காலக்கட்டத்தில் ரஜினிக்கே சவால் விட்டார். உடன் இருந்தவர்கள் எல்லாம் நீங்கள்தான் அடுத்த எம்.ஜி.ஆர் என தூபம் போட்டனர்.

புகழின் உச்சிக்கு சென்ற ராமராஜனுக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தார்.

அப்போதிலிருந்து சரிவை சந்திக்க தொடங்கினர்.அடுத்து வந்த எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.பின், சொந்த படம் எடுத்து இருந்த சொத்து பத்துகளை எல்லாம் இழந்தார். அரசியலில் நுழைந்தார். ஜெயலலிதா எம்.பியாக்கி அழகு பார்த்தார்.

அரசியல் வாழ்வும் எடுபடவில்லை. ஜெயலலதா மறைவுக்கு இவரை யாரும் ஏறெடுத்து பார்க்கவில்லை.இந்த நிலையில், விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்தார்.

அந்த நேரத்தில் மனைவிதான் ஓடோடி வந்து உதவி செய்தார். இப்போது கேட்பாரற்று உதவிக்கு ஆள் இன்றி தவிக்கிறார். மனைவி மற்றும் பிள்ளைகள் மனது வைத்தால்தான் உண்டு என்ற நிலையில்…