தாய் செய்த செயலால் நடுரோட்டில் நிர்வணமாக திரிந்த 20 வயது இளம் பெண்

தாய் செய்த செயலால் நடுரோட்டில் நிர்வணமாக திரிந்த 20 வயது இளம் பெண்.!!

உத்திர பிரதேசத்தை அடுத்த லக்னோவில் உள்ள சாலை ஒன்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் தவறான எண்ணத்தோடு அப்பெண்ணை பார்த்ததோடு அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,தற்செயலாக அங்கு வந்ததால் அந்த வாலிபர் தன் ஆட்டோவையும் அந்த பெண்ணையும் விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணை போலீசார் உதவியுடன் மீட்ட ஆராதனா சிங் என்ற சமூக சேவகி, பாதுகாப்பான இடத்துக்கு அந்த பெண்ணை  அழைத்து சென்றார்.

அதனைத்தொடர்ந்து மீட்கப்பட்ட அந்த இளம் பெண்ணிடம் விசாரித்த போது மாற்றான் தாயால் பலவகையில் சித்ரவதை அனுபவித்து வீட்டிலிருந்து துரத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த இளம் பெண்ணுக்கு துணிகள் உடுத்தப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படார்.