சீனாவில் கடுங்குளி நொடி பொழுதில் உறையும் முட்டை நூடுல்ஸ்

பெய்ஜீங்: சீனாவில் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸுக்கு சென்றுவிட்டதால் அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பச்சை முட்டைகளும், நூடுல்ஸ்களும் நொடி பொழுதில் உறை நிலைக்கு சென்றுவிடுகின்றன.

சீனாவின் ஹூசாங் மாவட்டத்தில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இங்கு வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

கொதிக்கும் நீரே சில நிமிடங்களில் ஐஸ் கட்டியாகி வருகிறது. இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சீனாவின் வடக்கு பகுதியான ஹைலாங்ஜியாங் மாகாணா மக்கள் கடுங்குளிரால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில ஒரு பெண் சமைத்த நூடுல்ஸை உண்பதற்காக ஸ்பூனில் எடுக்கிறார். ஆனால் நொடி பொழுதில் உறைந்துவிடுகிறது.

அதுபோல் பச்சை முட்டையை உடைத்தவுடன் மஞ்சள் மற்றும் வெள்ளை கரு உறைந்துவிடுகிறது. அந்த கருக்களை உடைத்து எடுக்கக் கூடிய அளவுக்கு உறைந்து போய் விடுகிறது.