அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் வேண்டாம் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கனடா

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட  உலக நாடுகள் பல, வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் வித்துள்ள நிலையில் கனடா மட்டும் ஆச்சரியமான அனைவரையும் வாயைப் பிளக்க செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் அகமது ஹுசேன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகின்றது.இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

உலக வரலாற்றில் மிகப் பெரிய குடியேற்ற அனுமதி!

நடப்பாண்டு 2018-ல் மட்டும் 3,10,000 நவர்களுக்குக் குடியேற அனுமதி வழங்கப்பட இருக்கின்றது. அதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கு, 2020-ம் ஆண்டுல் 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன்

இது வரை கனடா குடிபெயர்வதில் முதல் இடத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஆப்ரிக்கா நாடுகள் உள்ளன. இந்தத் தரவு 2011 முதல் 2016 வரையில் நடைபெற்ற குடிபெயர்வுகளைப் பொறுத்தது கூறப்படுகின்றது. அடுத்து இந்த இடத்தில் ஆசிய நாடுகள் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதது

அந்த வகையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், நைஜீரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.