இயக்குநர் சூர்யாவுக்கு ரிவிட் அடித்த விக்ரம் பிரபு ரீ ரிவிட் அடித்த இயக்குநரின் அல்லக்கைகள்

தென் இந்திய சினிமா இயக்குநர்களுக்கு இது பொல்லாத காலம் போல! ‘அந்த விஷயத்தில்’ அசிங்கப்பட்டு நிற்பது வாடிக்கையாகி கொண்டிருக்கிறது. தன்னிடம் தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர் அநாகரிகமாக நடக்க முயன்றார் என்று நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பேசிய பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை.

அதற்குள் அடுத்த அட்டாக் ஆரம்பித்திருக்கிறது.

இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்து வெளியாக இருக்கிறது ‘பக்கா’ திரைப்படம்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது அதன் இயக்குநர் எஸ்.எஸ். சூர்யா செய்த ‘அந்த’டைப் விவகாரத்தால் கடும் கடுப்பிலிருக்கிறாராம் விக்ரம் பிரபு.

விஷயம் இதுதான்...ஷூட்டிங்கின்  போது கேரக்டர் ஆர்டிஸ்ட் ராணியிடம் தவறான எண்ணத்துடன் வழிந்தாராம் டைரக்டர். டென்ஷனான ராணி ஸ்பாட்டிலேயே வைத்து பொளேர்!களை விட்டாராம் ராணி. இதை லைவ்வாக கவனித்திருக்கிறார் விக்ரம் பிரபு.

அந்த நிமிடத்திலிருந்து பட டைரக்டரை சுத்தமாக மதிப்பதேயில்லையாம் இவர்.

ஒழுக்க சீலனாக இருந்து படத்தை பாதகமில்லாமல் கரையேற்ற வேண்டிய கேப்டன் போன்ற டைரக்டர் இப்படி நடந்து கொண்டதால் அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் புறக்கணித்துவிட்டாராம் விக்ரம் பிரபு.

ஹீரோவின் இந்த நடவடிக்கை டைரக்டரை அநியாயத்துக்கு பாதித்துவிட்டதாம்.

இதனால் அவர் நொந்து கிடப்பதை பார்த்து கொதித்த பக்கா பட டீமை சேர்ந்த, இயக்குநருக்கு ஆதரவான சிலர் ‘வழிசலா பேசுனதுக்கே விக்ரம் பிரபு இவ்வளவு ஆவேசப்படுறாரே! ஒரு காலத்துல அவங்க அப்பாவும், பூ மேடமும் எப்படி இருந்தாங்கன்னு தென்னிந்திய இண்டஸ்ட்ரிக்கே தெரியுமே! அதை ரீவைண்ட் பண்ணி இப்போ அப்பாவின் வீட்டை விட்டு வெளியேற தயாரா இவரு?’ என்று விக்ரம் பிரபுவின் காதுபடவே கொளுத்திப் போட்டிருக்கிறார்களாம்.

இந்த பஞ்சாயத்து எதில் முடியுமென தெரியவில்லையாம்.