அஜித் சொன்னது உண்மை என்றால் தலை வணங்குகிறேன் முன்னணி இயக்குனர் பதில்

அஜித் தற்போது விசுவாசம் படத்திற்காக ரெடியாகி வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு கலை நிகழ்ச்சி நடத்தப்போகின்றோம் என நடிகர் சங்கம் அஜித்தை சந்தித்த போது, அஜித் ‘ஏன் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும், நாமே பணம் கொடுக்கலாமே’ என்று கூறியதாக செய்தி வந்தது.

இதுக்குறித்து இயக்குனர் அமீரிடம் கேட்ட போது ‘அஜித் அப்படி கூறியது உண்மை என்றால், கண்டிப்பாக அவருக்கு தலை வணங்குகிறேன்.

ஏனெனில் அஜித் ஆரம்பத்திலிருந்தே தன் ரசிகர்கள் மீது அக்கறை கொண்டவர், அதனால் தான் மன்றங்களை கூட கலைத்தார்’ என கூறியுள்ளார்.