அழகான பெண்ணை பார்த்த உடனே பழக நினைப்பவரா அப்போ உங்க மனைவி இப்படித்தான் இருப்பாங்க

2000 ஆண்டுகளுக்கு முன்பாக, உலகியல் வாழ்வில் ஏற்பட்ட நல்லவைகைளையும், தீமைகளையும் சுட்டிக் காட்டி, நம் வாழ்வின் பாதைகளையும் செம்மைபடுத்த பல இலக்கிய நுால்களை இயற்றி வைத்து விட்டுச் சென்றுள்ளனா் நம் முன்னோர்.

இதெல்லாம் அவா்கள் பொழுது போகாமல், மெனக்கெட்டு செய்த காரியங்கள் இல்லை.

தொட்டால் நெருப்பு சுடும் என்று, நம் வீட்டில் இருக்கும் பெரியோரா்கள், நம்மை அந்த நெருப்பிலிருந்து விலகியிருக்கவும்,

அந்த நெருப்பு நம்மையே ஒரு நொடியில் அழித்து விடும், என்பதை உணர்த்தவே, இது போல பல எச்சரிக்கைச் செய்திகளைச் சொல்கிறார்கள்.

பலா் இதைக் கூா்ந்து கவனிக்காமல், பட்ட பின்பு தான் புத்தி வரும் என்ற போக்கில், நாம் அந்த அனுபவத்தைப் பெற்று சோர்ந்து போயிருக்கும் சமயத்தில் தான்,

அந்த இலக்கியச் செய்திகளை எல்லாம் நாம் எண்ணிப் பார்க்கிறோம். காலம் கடந்த ஞானம் என்பது இது தான்.

“திரிகடுகம்” என்ற நுால், நுாறு வெண்பாக்களைக் கொண்ட இலக்கியம். நல்லாதனார் என்பவா் உயரிய வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் நோக்கத்தில் தான் இந்த நுாலை இயற்றியிருக்கிறரா். கடுகம் என்றால்  உறைப்பு மற்றும் கார்ப்பு என்று பொருள்.

சுக்கு, மிளகு,திப்பிலி இந்த மூன்றும், கடுக்கும் பொருட்கள். ஆனால், இந்த மூன்றும் மிகச் சிறந்த மருத்துவக் குணம் நிறைந்தவை.

இது போலத் தான் மூன்று ஒழுக்க குறைகளை ஒன்று சோ்த்து, தனது ஒவ்வொரு வெண்பாவிலும், அமையும்படி பொருத்தமாக இந்த நுாலில் சேர்த்துள்ளார்

இந்த நுாலின் ஆசிரியா். திருமணம் முடிந்து, கணவனும் மனைவியும் வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்ற நிலையினையும் எடுத்துரைத்திருக்கிறார். இதற்கென்றே 35 வெண்பாக்களைப் பாடியிருக்கிறார்.

ஒரு பெண் ஆனவள் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளைப் பற்றியும், பெண்ணியம் பற்றியும் இந்த நவீன யுகத்திலும், தொலை நோக்குப் பார்வையுடன் அன்றே செய்யுளாகத் தந்திருக்கிறது இந்த நுால்.

ஒரு பெண் பூப்பெய்தாலும், அவள் மனதளவில் ஒரு குடும்பத்தை நடத்தும் அளவிற்கு, மனதளவில் பக்குவப்பட்ட பின்னா் தான் அவளுக்குத் தகுந்த கணவனாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும். 

அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்துவது என்பது ஆணின் அறியாமையைத் தான் காட்டுகிறது. அந்தப் பெண்ணை அடிப்பதால், அந்த ஆண் மேலும் பலவீனப்பட்டிருக்கிறான் என்று தான் பொருள். ஒரு ஆணின் மனம் குரங்கை விடத் தாவும் மனநிலையில் தான் இருக்கிறது. 

அதனால் தான், இனிய சொல்லைச் சிரித்துப் பேசும் கணிகையா் வலையில் விழுந்து விடுகின்றான். அந்த கணிகையர்களின் செயற்கையான அழகு அவனை நரகத்தில் தள்ளி விடும். அறிவுடைய எவரும்,

இந்த மாதிரி விலைமாதரின் கையால் உணவு உண்பதைக் கூட விரும்ப மாட்டார்கள். தனக்கு உரிமை இல்லாத பெண்ணை விரும்பும் ஆடவன் மதி மயங்கி, தீய செயலில் ஈடுபடுகிறான்.

அழகு எப்போதுமே ஆபத்தானது. அழகான பொருள் மட்டுமல்ல. அழகிய மங்கையரைக் கண்டாலும், மனிதன் அந்தப் பொருளையும், அந்த அழகிய பெண்ணையும் அடையத் துடிக்கிறான். தகாத இந்த  ஆசை,

அவனைப் பல தீய வழிகளில் ஈடுபடத் துாண்டுகிறது. துவக்கத்தில், இது இன்பத்தைக் கொடுத்தாலும், போகப் போக அதற்கு நோ் மாறான அளவிற்கு அதிகமான துன்பத்தையும் அனுபவிக்க வேண்டி வரும்.

எனவே அழகிய பொருட்களுக்கு ஆசைப்படக் கூடாது என்று, நன்மையைத் தரும் 66 வெண்பாக்களையும், தீமை தரும் 34 கருத்துச் செறிந்த செய்யுளையும் இந்தத் திரிகடுகம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.