கண் முன்னே இருக்கும் எச்சரிக்கை தெரிந்தே குழந்தைக்கு விஷத்தை வாங்கி தர வேண்டா

நம்ம ஊருல சோறு சமைக்கும் போது வீணாக கஞ்சி வருகிறதேன்னு நினைச்சு கூறுகெட்ட குக்கர்ல சமைக்கிறோம்..

ஆனால் டென்மார்க்கில் எல்லா கடைகளிலும், இதே சோத்து கஞ்சியை உடலுக்கு உறுதியளிக்கும் பானம் என்று சொல்லி Rice drink-ன்னு பேரு வச்சு ஒரு லிட்டர் இந்திய மதிப்பில் சுமார் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள்

நமது பாரம்பரிய முறையை வைத்து அவர்கள் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்..வெறும் கஞ்சியை காலை உணவாக குடித்து கொண்டு வேலைக்கு போயி 100 வயது வரை வாழ்ந்தவர்கள்  எல்லாம் காணமல் போய்விட்டனர், காரணம்..? நமது பழக்கவழக்கத்தை எல்லாம் அயல்நாட்டுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டோம்..

நமது பாரம்பரியம் மற்றும் உணவு முறைகளை பற்றி அறியாமல் மேற்கத்திய வாழ்க்கைமுறையை விரும்பியதன் விளைவு, இன்று கார்ப்பரேட்டுகளின் கள்ளத்தனம் வெட்ட வெளிச்சமாக அரங்கேறுகிறது..

உதாரணமாக, இந்த புகை படத்தில் உள்ள kandy egg அட்டையில் 0-3 னு தவறு குறியீடு போட்டுருக்கு,  அர்த்தம்..? 1வயது முதல் 3 வயது குழந்தை சாப்டகூடாதுனு அர்த்தம் இதை அந்த முட்டாய் உள்ள காகிதத்தில் அச்சடித்தால் யாரும் வாங்கமாட்டாங்குனு

அதை அட்டையில் அச்சடித்திருக்கிறார்கள் வியாபாரமூளை.. தயவு செய்து குழந்தைக்கு இது போன்ற விளம்பரம் வந்தாலோ சேனலை மாத்திருங்க முடிந்த அளவு குழந்தையை கடைக்கு கூட்டிட்டு போய் பழக்க வேண்டாம் .

பழையதை எல்லாம் மறந்ததன் விளைவு தான், இன்று கார்ப்பரேட்டுகளின் காட்டில் மழை..