அடுத்தவங்க வயித்துல அடிச்சு பொழைக்கற காசு ஒடம்புல ஒட்டாது பா ரூ 6 வசூலிக்கும் தனியார் பேருந்து

சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

தனியார் பேருந்துகளிலும் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து வரும் நிலையில் விஷம் போன்ற கட்டண உயர்வை மக்கள் ஏற்க முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பேருந்துகளில் விளம்பரம், போக்குவரத்துக் கழக மோட்டல்கள், போக்குவரத்துக் கழக கொரியர் சர்வீஸ் மூலம்இதர வருமானங்களைப் பெருக்க நடவடிக்கை எடுக்காமல் ஒரு நாளைக்கு ரூ.10 கோடி அளவுக்கு மக்கள் தலையில் பேருந்துக் கட்டணப் பேரிடி இறக்கப்பட்டுள்ளது.

3600 கோடி ரூபாய் பேருந்து கட்டண உயர்வு இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டு வாங்கும் சக்தி குறைந்து, தாங்கும் சக்தியற்ற மக்கள்மீது பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

சாமான்ய மக்களிடம் இரக்கமின்றி தனது கோரமுகத்தை வெளிக்காட்டி உள்ளது. இந்த நிலையில் சில தனியார் பேருந்துகள் மக்கள் படும் துயரத்தை அறிந்து பழைய கட்டணங்களையே வசூலித்து வருகின்றன.

அந்த வகையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் பேருந்து அதே பழைய ஆறு ரூபாய் கட்டணத்தை வசூலிக்கிறது.

"அண்ணா சேத்தியாதோப்புக்கு ஒரு டிக்கேட் கொடுங்க" என்று ஒருவர் கேட்க
கண்டக்டர் "6 ரூபாய் சில்லரை யா கொடுப்பா" என்கிறார். "ஏன் அண்ணா 16 ரூபாயா??? டிக்கேட்" என்று கேட்க... கண்டக்டர் " இல்லப்பா நாங்க  விலை எதுவும் அதிகமாக்கல
என்கிறார்.

ஏன் அண்ணா மத்தவங்கலாம் ஏத்திடாங்களே நீங்க? என்று அவர் வினாவா..
கண்டக்டர், "இந்த காசே உடம்புல ஒட்டமாட்டுங்கது" என்று வருத்ததுடன் தெரிவிக்கிறார்.

"நம்மலோட சாப்பாட்டு பருக்கைக்கு அப்பறம் நாம வீணாக்குற ஒரு ஒரு பருக்கையும் இன்னொருத்தனுக்கு சொந்தமானது" என்பதை புரிந்து செயல்படுகின்றனர் இது போன்ற சிலர்.