கனடாவில் 49 பெண்களை கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்த நபர்

கனடா வான்கூவர் பகுதியில், 49 பெண்களை கொடுமைப்படுத்தி கொலை செய்து பின்னர் அவர்களது மாமிசத்தை விற்பனை செய்த பன்றி பண்ணை உரிமையார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடாவை சேர்ந்த ரொபர்ட் பிக்டோன் என்ற வயது நபர் வான்கூவரில் பன்றி பண்ணை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ரொபர்ட் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு அதிகாரிகள் சென்று சோதனை செய்தார்கள்.

இதன்போது, அங்கு கொலை செய்யப்பட்ட பெண்களின் பொருட்களும், உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. அத்துடன் இரண்டு பெண்களை கொலை செய்து அவர்களின் தலை, கை, கால்களை குளிரூட்டும் பெட்டியில் ராபர்ட் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரொபர்ட் பாலியல் தொழிலாளர்கள், போதை மருந்து விற்பவர்கள் மூலம் பெண்களை தனது பண்ணைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பணம், மது போன்றவற்றை கொடுப்பதாககூறி அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளார்.

இதுவரை 49 பெண்களை அவர் கொலை செய்துள்ளார், பின்னர் அவர்களின் சடலத்தை பண்ணையில் இருக்கும் பன்றிகளுக்கு உணவாகவும், அந்த மனித மாமிசத்தை அப்பகுதி பொலிஸாருக்கு விற்பனை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ரொபர்ட் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு அதில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இதனையடுத்து, ரொபர்ட் சிறையில் உள்ள சக கைதிகளிடம் இன்னும் ஒருவரை கொலை செய்திருந்தால் 50 பேரை கொன்ற பெருமை கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளமை ஆவணபடங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு அம்மா வை கழற்றிவிட்ட பாவனா