திருமணத்திற்கு அம்மா வை கழற்றிவிட்ட பாவனா

திருச்சூர்: நடிகை பாவனா தனது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மூத்த நடிகர் ஒருவரை அழைக்கவில்லையாம்.

நடிகை பாவனா தனது நீண்ட நாள் காதலரான கன்னட பட தயாரிப்பாளர் நவீனை கடந்த 22ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் திருமணம் செய்து கொண்டார்.

அதே நாளில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

மம்மூட்டி 
மோகன்லால்

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மம்மூட்டி, ஜெயராம், ப்ரித்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் வந்திருந்தனர். மோகன்லால் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்ததால் வரவில்லை.

 

இன்னசன்ட் 
அழைப்பு இல்லை

மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவரான இன்னசன்டை பாவனா அழைக்கவில்லையாம். திருமணத்திற்கும், வரவேற்புக்கும் தன்னை அழைக்கவில்லை என்று இன்னசன்ட் தெரிவித்துள்ளார்.

 

அம்மா 
பத்திரிகை

அம்மா சங்கத்தை சேர்ந்த யாருக்கும் பாவனா பத்திரிகை வைக்கவில்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது. அம்மா நிர்வாகிகள் யாரும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் இந்த பேச்சு கிளம்பியுள்ளது.


ரம்யா 
மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர், ஜெயசூர்யா, இந்திரஜித், சன்னி வெயின், அஜு வர்கீஸ், ரம்யா நம்பீசன், நஸ்ரியா நஸீம், நவ்யா நாயர், மனோஜ் கே ஜெயன் உள்ளிட்ட ஏராளமானோர் பாவனா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டனர்.

 

2 கோடி மோசடி கொலைமிரட்டல் விமல் மீது தயாரிப்பாளர் போலீசில் புகார்