ஹீரோவுக்காக ரொம்பவே அட்ஜஸ்ட் செய்த மெர்சல் ஹீரோயின்

ஹைதராபாத்: ஹீரோ நானிக்காக நித்யா மேனன் தனது கொள்கையை ஒரேயடியாக தளர்த்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம் அவே. பிரபல தெலுங்கு ஹீரோ நானி தயாரிக்க பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நானியும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், லிப் டூ லிப் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இத்தனை நாட்களாக கன்டிஷன் போட்டு வந்தார் நித்யா மேனன். இந்நிலையில் அவே படத்திற்காக தனது கொள்கையை தளர்த்தியுள்ளார்.

அவே படத்தில் நித்யா மேனன் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளார். அது மட்டும் அல்ல மற்றொரு நடிகையுடன் சேர்ந்து லிப் டூ லிப் காட்சியில் வேறு நடித்துள்ளார்.

அவே படத்தில் அதிலும் குறிப்பாக உங்கள் கதாபாத்திரத்திரம் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க வேண்டும் என்று நானி நித்யா மேனனிடம் பேசி அவரை அந்த காட்சியில் நடிக்க வைத்தாராம்.

அவே படத்தில் ரெஜினா போதைக்கு அடிமையாக நடித்துள்ளார். நித்யா மேனனோ ஓரினச்சேர்க்கையாளராக நடித்ததுடன் லிப் டூ லிப் காட்சியிலும் நடித்துள்ளார். இந்த தகவல்களை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் படத்தை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.

நித்யா மேனனா இப்படி நடிக்க ஒப்புக் கொண்டது என்று திரையுலகினர் ஆச்சரியப்படுகிறார்கள். நானி பேசினாலும் நித்யா ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே பலரும் நினைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.