வீட்டு வேலைகாரர்களின் சம்பளத்திற்கு பஸ்ல போக முடியுமா கூட்டி கழிச்சு பார்த்தாலும் சரியா வரலையே

மதுரை: தமிழ்நாட்டை சேர்ந்த வீட்டு வேலைக்காரர் ஒருவரின் சம்பள பட்ஜெட் புகைப்படம் வைரல் ஆகி இருக்கிறது. அதில் வீட்டு வேலைபார்ப்பவர்களின் பேருந்து பயண கட்டணத்திற்கு செலவாகும் தொகையும் எழுதப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் இதை வைத்து எல்லோரும் சமூக வலைத்தளங்களில் மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.

அந்த வைரல் மீம்களை போலவே ஒரு வீட்டு வேலைக்காரரின் பட்ஜெட் புகைப்படமும் வைரல் ஆகி இருக்கிறது. வெறும் துண்டு சீட்டில் எழுதப்பட்டு இருக்கும் அந்த பட்ஜெட் வேற லெவல் காமெடியாக இருக்கிறது.

பொதுவாக வீட்டு வேலைக்காரர்களுக்கு 6000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் அனைத்தும் பிடித்தமும் போக 5178 கையில் வரும்.

இந்த சம்பளம் வாங்கும் ஒருவர் தினமும் வேலைக்காக பழங்காநத்தம் பகுதியில் இருந்து அண்ணா நகர் செல்ல 22 ரூபாய் ஆகும். எனவே போய்வர தினமும் புதிய கட்டணம் படி 44 ரூபாய் ஆகும்.

இதனால் மாதம் முழுக்க பேருந்துக்கு மட்டும் 1320 ரூபாய் செலவு செய்ய வேண்டும். மீதம் 3858 ரூபாய் மட்டுமே இருக்கும்.

இதை வைத்து மதுரையில் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று அந்த புகைப்படத்தில் கேட்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது.

தினகரனுக்கு முன்பே முந்திக்கொண்ட திவாகரன் மகன் அரசியலில் நிகழ்ந்த திடுக்கிடும் திருப்பம்