ஆச்சரியங்களை அள்ளித்தெளிக்கும் முதல் காதல் காதலியை இப்படியா சந்திக்கணும்

வாழ்க்கையில் மிகவும் பிடித்தமான நாட்கள் என்றால் நான் கண்டிப்பாக என்னுடைய பள்ளி நாட்களை குறிப்பிடுவேன்... நண்பர்கள் கூட்டம் அப்போது தான் சேர ஆரம்பிக்கும். வாழ்க்கை குறித்த எந்த பயமோ... திட்டமோ முன் யோசனையோ எதுவும் இருக்காது.

வாழ்க்கையை எந்த வித முன் அபிப்ராயங்களின்றி அணுகுவோம். அப்படியான இளம் வயதில் ரசித்தவற்றை இருபது வருடங்கள் கழித்து ஏன்.... அறுபது வருடங்கள் கழித்து நம்முடைய முதுமைப் பருவத்தில் நினைத்தால் கூட மிகவும் சுவாரஸ்யமானதாய் இருக்கும்.

இந்நேரம் என்னுடன் படித்த பலரும் வேலை... குடும்பம் என்று செட்டிலாகி இருப்பார்கள். பலரும் வெளியூர்களுக்கு வந்துவிட்டோம். இந்நிலையில் நாங்கள் படித்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னால் மாணவர் சங்கம் சார்பாக எல்லாருக்கும் அழைப்பு வந்திருந்தது.

யாரை எங்கிருந்து பிடித்தார்கள்... என்னுடைய தொடர்பு எண் எப்படி கிடைத்தது என்று எதுவும் புரியவில்லை... யார் யாரோ பேசினார்கள். அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பள்ளியில் செய்த சேட்டைகளை, வாங்கிய திட்டுக்களை, அடிகளை எல்லாம் நினைவூட்டி மறந்துட்டியாடா என்று பேசினார்கள்.. ஏதோ எனக்கே இருபது வயது குறைந்து மீண்டும் பள்ளிக்குச் சென்ற உணர்வு.

இப்போது நான் படித்த பள்ளி எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அதைவிட உடன் படித்த நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று ஆர்வத்துடன் கண்டிப்பாக சொல்லிவிட்டான்.

அங்கே வேறு யார் வருவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது... யார் பெயர் விடுபட்டுள்ளது... அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்று தேடி அவர்களையும் அழைக்கும் வேலை மும்முரமாக நடந்தது.

பேச்சுவாக்கில் சத்யா பெயரும் அடிப்பட்டது.... சத்யா மறக்க முடியுமா இந்தப் பெயரை... என் வாழ்க்கையில் வந்த முதல் தேவதையாயிற்றே... எட்டாம் வகுப்பிலிருந்து அவள் மீது ஒரு மையல்...

அவளுக்காக அவளை பார்க்க வேண்டும் என்பதற்காக சைக்கிளை உருட்டிக் கொண்டு பன்னிரெண்டு கிலோமீட்டர் அவளுக்கு பின்னால் சென்றிருக்கிறேன். பதினோராம் வகுப்பில் தான் பிறருக்குத் இந்த விஷயம் தெரிந்தது. அப்போதும் சத்யாவிடம் நேராக சென்று பேசும் தைரியம் எனக்கு இருக்க வில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்து எல்லாரும் கிளம்பிய நேரம். என்னுடைய கூட்டாளிகள் சிலர்... மாப்ள இதவிட்டா நீ சத்யா பாக்கமுடியாதுடா ஒழுங்கா போய் உன் லவ்வ சொல்லு என்று கிளப்பிவிட்டார்கள்.

அவளை பள்ளி முழுவதும் தேடினேன்.... எங்கும் ஆளில்லை. இரண்டாவது மாடி வகுப்பறையில் ஒவ்வொரு அறைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

மேலேயிருந்து எதேச்சையாக கீழே பார்க்க.... வாசலில் ஒருவர் டிவிஎஸ் 50யில் வந்தார். அவரின் பின்னால் ஓடிச்சென்று ஒருத்தி ஏறுகிறாள்....

சத்யா... அது சத்யா தான். மேலேயிருந்து சத்யா... நில்லு போகாத சத்யா என்று கத்திக் கொண்டே ஓடினேன்.... ஆனால் அவள் மறைந்து விட்டாள். நான் வருவதற்குள்ளாக அவள் சென்றுவிட்டாள். கடைசியாக அவளுக்கு ஒரு பாய் கூட சொல்ல முடியவில்லை ஏன் அவளின் முகத்தைக் கூட சரியாக பார்க்க முடியவில்லை.

எந்த நேரத்தில் வாய் வைத்தார்களோ நண்பர்கள் சொன்னது போல அதற்க்குப்பிறகு சத்யாவை சந்திக்கவே முடியவில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து நிகழப்போகும் கெட் டூ கெதரில் மீண்டும் அவள் பெயர்.... சத்யா... அவள் வருவாளா? இத்தனை ஆண்டுகள் கழித்து என்னை அடையாளம் கண்டு கொள்வாளா?எதுவும் தெரியவில்லை.

சத்யாவை அழைக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தவுடன் சொல்லி வைத்தாற் போல எல்லாரும் இவனிடமே வந்து சத்தியாவின் தொலைபேசி எண்ணை கேட்டார்கள் . 
அவ்வளவு நம்பிக்கையா? ஒவ்வொருரிடமும் சத்தியாவைப் பற்றி எனக்குத் தெரியாது.... என்று சொல்லி சொல்லியே அவனுக்கு பாதி உயிர் கழண்டு விடும் போலிருந்தது.

இந்த மூனு ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு காதல் பிரிவு உண்டாகலாம் பயப்பட தேவையில்லை