5 கோடி மோசடி செய்தாரா அந்த இளம் ஹீரோ

திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்று எந்த நேரத்தில் படத்துக்கு தலைப்பு வைத்தார்களோ தெரியவில்லை. தலைப்புக்குப் பொருத்தமான சம்பவங்கள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவா நடிகா சந்திரன்.

சன் டிவியின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான அஞ்சனாவை அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டவர் இவர்.

கயல் படத்தையடுத்து ரூபாய் என்ற படத்தில் நடித்த சந்திரன் தற்போது கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம், வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தை 2 மூவிஸ் ஃபப்ஸ் (two movies buffs) என்ற பேனரில் கயல் சந்திரனின் அண்ணன் ரகுநாதன் தயாரிக்கிறார்.

சந்திரனும், ரகுநாதனும் ராம் - லட்சுமணனைப்போல் ஒற்றுமையான சகோதரர்கள் என்று திரையுலகில் பாராட்டப்படுகிற அபூர்வ சகோதரர்கள்.

இந்நிலையில், கயல் சந்திரன் மற்றும் அவரது சகோதரர் ரகுநாதன் மீது 5 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பறந்து செல்ல வா, சிவலிங்கா மற்றும் குற்றம் 23 உள்ளிட்ட படங்களின் வினியோகஸ்தரான அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு வெங்கடாசலம் இந்த புகாரை அளித்துள்ளார்.

என்ன விஷயம்?

திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் இணை தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் அந்தப் படத்தின் தயாரிப்புக்கு 5 கோடியை கொடுத்திருக்கிறார் பிரபு வெங்கடாச்சலம்.

இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட அந்தப் படத்தின் போஸ்டர்களின் பிரபு வெங்கடாசலத்தின் அக்ராஸ் பிலிம்ஸ் பெயர் இடம் பெறவில்லை.

இதுகுறித்து சந்திரன், ரகுநாதன் இருவரிடமும் கேட்டபோது, திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தை நாங்களே தயாரித்து கொள்கிறோம் என்றும், நீங்கள் கொடுத்த 5 கோடி ரூபாயை திருப்பி தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகர் சந்திரன், ரகுநாதன் இருவரும் சொன்னபடி 5 கோடி பணத்தை திருப்பி தரவில்லையாம்.

பிரபு வெங்கடாச்சலம் தெரிவித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்.

ஆஃப்டர் விவேகம் அஜீத் சிவா சந்திப்பு நடந்தது என்ன