ஆஃப்டர் விவேகம் அஜீத் சிவா சந்திப்பு நடந்தது என்ன

“உலகமே உன் எதிர்ல நின்னு நீ தோத்துட்ட தோத்துட்ட என்றாலும்….” விவேகம் படத்தில் வரும் இந்த டயலாக் எந்த நேரத்தில் எழுதப்பட்டதோ, அப்பவே அதில் பாதி நிஜமாகக் கடவது என்று இறைவன் சபித்திருக்கலாம். சில இடங்களில் ஆஹா கலெக்ஷன். பல இடங்களில் ஐயோ கலெக்ஷன்.

சோசியல் மீடியாக்களில் படத்தை கிழித்து தொங்கவிட்டுவிட்டார்கள். அஜீத்தின் அதிதீவிர ரசிகர்களாக இருக்கும் பத்திரிகையாளர்களில் சிலர், பொய் முகம் கொண்டு பாராட்டித் தள்ளிய அசிங்கமும் அரங்கேறியது. இரண்டுக்கும் நடுவே இருக்கும் யதார்த்தம் புரிந்தவராச்சே அஜீத்? சில தினங்களுக்கு முன் ‘விவேகம்’ இயக்குனர் சிவாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாராம். அப்போது பேசப்பட்டதுதான் அஜீத்தின் நற்குணத்திற்கு ஒரு சான்று.

“இந்தப்படம் குறித்த விமர்சனங்களும் ஏச்சு பேச்சுகளும் உங்களை காயப்படுத்தியிருக்கும். எதற்கும் கவலைப்படாதீங்க. அந்த தாக்குதல் எதுவும் உங்களை குறி வைத்து நடந்தது இல்ல. என்னை குறி வச்சு நடந்தது. அது எனக்கு நல்லா தெரியும். அடுத்த படத்திற்கான கதையை பேசுங்க. திரும்பவும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம்” என்றாராம்.

வலியாக உள்ளே போய் வாலியாக திரும்பி வந்திருக்கிறார் சிவா!

மகனுக்கு பெண் தேடும் மன்சூரலிகான்