பன்னீரை அசிங்கப்படுத்திய பிரதமர் அலுவலகம் வெளியான பரபரப்பு தகவல்

கடந்த வாரம் நிதித் துறை கூட்டம் தொடர்பாக, நிதித்துறையை கையில்அ வைத்திருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டில்லிக்கு சென்றார். அப்போது, அவர், பிரதமர் மோடியை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார்.

சென்னையில் நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு மோடியை அழைக்க விரும்பியிருந்தபோதும், ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு வரை ‘டெல்லி’யின் செல்லப்பிள்ளையாக கருதப்பட்டார் ஓபிஎஸ். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ‘தர்மயுத்தம்’ தொடங்கியபோது அவருக்கு பெரும் பலமாக உதவியது மத்திய அதிகார வட்டாரங்கள்தான்!

ஓபிஎஸ் தனது உயிருக்கு ஆபத்துள்ளது என, மத்திய பாதுகாப்பைக் கேட்டதும் உடனே கிடைத்தது. அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, அணிகள் இணைந்து, அவர் துணை முதல்வர் ஆனபிறகும் இன்னும் தொடர்கிறது. இதையெல்லாம் தாண்டி, அ.தி.மு.க.வின் அதிருப்தி அணி தலைவராக, சாதாரண ஒரு எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருந்தபோது நினைத்த நேரத்தில் எல்லாம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஓபிஎஸ்.

பன்னீர் செல்வத்தை இந்தியாவே ஆச்சரியமாக பார்த்தது அப்போது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் சேர்ந்து விவசாயிகள் பிரச்னைக்காக கேட்டும் கிடைக்காத பிரதமரின் அப்பாய்ன்மென்ட், ஓபிஎஸ்.ஸுக்கு மட்டும் அவ்வளவு சுலபமாக கிடைத்ததும் சர்ச்சை ஆனது. 

அதுமட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தின் அத்தனை நகர்வுகளும் ஓ.பி.எஸ் அணிக்கு சாதகமாக நகர்ந்தது, அரசியல் ரீதியாக ஓ.பி.எஸ்-யை  வலிமைப்படுத்தும் வகையில் வருமான வரித்துறையின் ரெய்டுகள் அமைந்தது.இவை எல்லாமே ஓ.பி.எஸ்ஸின் டெல்லி செல்வாக்கை உணர்த்தின. 

இந்தநிலையில் தற்போது அவருக்கு அப்பாய்ன்மென்ட் மறுக்கப்பட்டதற்கு காரணம்,தமிழக அரசு மீது,பா.ஜ.க., தலைமையும், பிரதமர் மோடியும் கோபத்தில் இருப்பதே, காரணம் என, டில்லி பா.ஜ.க., வட்டாரங்கள் கூறுகின்றன.

இது குறித்து, டில்லி பா.ஜ.க., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின், மத்திய பா.ஜ.க., அரசு வழிகாட்டலின் கீழ், ஒரு அரசு அமைந்து, அது மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என, பிரதமர் மோடி எதிர்பார்த்தார். 

அதற்காகவே, அ.தி.மு.க., தலைமையில் குழப்பமான சூழல் ஏற்பட்ட போது, பா.ஜ.க.,தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் மறைமுகமாக, அ.தி.மு.க., அரசுக்கு உதவினார்.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, தமிழக அரசு ஊழலில் ஊறித் திளைக்கிறது.அதனால், ஒட்டுமொத்த தமிழக அரசின் செயல்பாடுகள் மீதும், மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. 

இதனை அடுத்தே, முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திப்பதை பிரதமர் தவிர்க்க துவங்கி உள்ளார்.இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
 

ஜெ அறையை திறந்தால் அவ்வளவு தான் எடப்பாடி பல்சை எகிறவிட்ட கேரள சாமியார்