வீட்டோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ரஷ்யா மற்றும் சீனா அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: தீவிரவாதத்தை விட ரஷ்யாவும், சீனாவும் தான் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முன்னுரிமை தொடர்பான வியூக ஆவணத்தை பென்டகன் வெளியிட்டது. கடந்த இரு தசாப்தங்களில் நடைபெற்ற தேர்தல்கள், சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலை இருப்பதை வெளிக்காட்டியிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போட்டியிடுவதை காட்டிலும், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுடன் போட்டியிட முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே பென்டகனின் கருத்தாக உள்ளது. 

இது பற்றி பேசிய அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரான ஜிம் மேட்டிஸ், உலக வல்லரசாவதற்கான போட்டியால் சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் என்ற ஜார்ஜ் ஷூல்ட்ஸின் கூற்று மீண்டும் உண்மையாகி உள்ளது என்றார். தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போரிட்டாலும், வல்லரசு போட்டிக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அமெரிக்க மக்களின் அடுத்த தலைமுறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ராணுவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளில் ரஷ்யாவும், சீனாவும் சர்வாதிகாரிகளை ஆதரிப்பதாகவும் இதற்காக வீட்டோ அதிகாரத்தை அவை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் சாடினார். ரஷ்யா மற்றும் சீனாவை விட அமெரிக்க ராணுவம் நவீனமிக்க வலுவானது என்ற அவர் வியூகம் தொடர்பான விரிவான விளக்கத்தை அளிக்க மறுத்து விட்டார். 

ஜெ அறையை திறந்தால் அவ்வளவு தான் எடப்பாடி பல்சை எகிறவிட்ட கேரள சாமியார்