விரைவில் ஒன்ராறியோ அரசின் அமைச்சரவையில் மாற்றம்

ஒன்ராறியோவில் சட்ட மன்றத்திற்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அதன் அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதனைத் தவிர மேலதிக விபரங்கள் எதனையும் முதல்வர் கத்தலின் வின்னின் அலுவலகம் இதுவரை வெளியிடவில்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த அமைச்சரவை மாற்றங்களில் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அமைச்சரவை மாற்றதில் தொடர்புபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடாத அமைச்சர்களை விலக்கிவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ள உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிக்கும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றத்தை ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் மேற்கொள்ளவுள்ளதாக நம்பப்படுகிறது.

தமிழகமெங்கும் வெடித்தது தை புரட்சி ஏன்டா கட்டணத்தை உயர்த்தினோம் என்று பீதியில்ஆளும் அரசு