தமிழகமெங்கும் வெடித்தது தை புரட்சி ஏன்டா கட்டணத்தை உயர்த்தினோம் என்று பீதியில்ஆளும் அரசு

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து இன்று காலையில் திருப்பூரில் மாணவர்கள் நேரடியாக களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திபுனலில் தகவல் வெளியிட்டு இருந்தோம்.

தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நாளில் இருந்து நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வந்த சர்க்கை விலை இரு மடங்காக உயர்வு, மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உளுந்து விநியோகம் நிறுத்தம், இப்போது பேருந்து கட்டணம் உயர்வு என மக்களின் மீது அரசு சுமையை சுமத்திக் கொண்டே செல்கிறது.

மற்றொருபுறம் மிகவும் ஏழைகளான தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 100% ஊதிய உயர்வு வழங்கியிருக்கிறது.

தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசை விட மோசமான ஒரு மக்கள் விரோத அரசை வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது தான் உண்மை.

மத்திய, மாநில அரசுகளால் ஏற்கெனவே சுமத்தப்பட்ட சுமைகளை தாங்க முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பேருந்து கட்டண உயர்வு என்ற புதிய சுமையையும் தாங்க முடியாது.

இதனால் அரசின் மீதான மக்களின் வெறுப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் வெறுப்பு வெளிக்காட்டப்படும் போது அரசால் அதனை தாங்கி கொள்ள முடியாது.

அதனை கடந்த வருடம் நடந்த தை எழுச்சி போராட்டத்திலேயே பார்த்து விட்டோம். இப்போது நடக்கும் ஆட்சியின் அவலத்தை பார்த்தால் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்த மாணவர்கள் இன்று நேரடியாகவே களத்தில் இறங்கி விட்டனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு பேருந்தை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பூரை தொடர்ந்து தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், திருவண்ணாமலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜயின் போக்கிரி பிளாப் தான் சர்ச்சை இயக்குனர் ஓபன் டாக்