சிவா இன்னும் தூங்குறாரா விசுவாசம் அப்டேட் எப்பதான்யா வரும்

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் விஜய்யின் 62-வது படம் சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பமானது.

சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவியது.

படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெறும் எனவும், பிறகு கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விஜய் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஆனந்தமாய் இருக்கிறார்கள். விஜய் 62 படத்தோடு இந்த வருட தீபாவளியை களைகட்ட வைக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கி விட்டார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் பூஜையோடு தொடங்கியிருக்கிறது. இப்படத்தின் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதனால், தீபாவளியைக் கொண்டாட சூர்யா ரசிகர்களும் ரெடி.

ஆனால், அஜித் ரசிகர்களோ, 'விசுவாசம்' படம் பற்றி மேற்கொண்டு எந்தத் தகவலும் வெளியாகாததால் கவலையில் உள்ளார்கள். விஜய் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை என்பதும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகி என்பதும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும் உள்ளது.

ஆனால், அஜித் ரசிகர்களோ, 'விசுவாசம்' படம் பற்றி மேற்கொண்டு எந்தத் தகவலும் வெளியாகாததால் கவலையில் உள்ளார்கள். விஜய் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை என்பதும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகி என்பதும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும் உள்ளது.

அதே போல, முன்னணி நாயகி யாராவது ஒருவர் நடித்தால் அஜித்துக்குப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்கள். அது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை 'விசுவாசம்' படக்குழு தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

'விசுவாசம்' படமும் விஜய் படத்துடன் தீபாவளிக்குப் போட்டி போட உள்ளதால், இப்போதே சமூக வலைத்தளங்களில் அதற்குப் போட்டியாக எதை ட்ரெண்ட் ஆக்குவது என அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.

எந்த அப்டேட்டும் வெளிவராததால் சிறுத்தை சிவா தூங்குறாரா என அஜித் ரசிகர்களே விமர்சிக்கத் தொடங்கி விட்டனர். சீக்கிரமே இசையமைப்பாளர், நாயகி, ஷூட்டிங் பற்றி விவரங்களை வெளியிட்டால் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.

'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளர் யார், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்கிற விவரங்களுடன் செம அப்டேட் ஒன்று வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

வில்லன் சூப்பர் ஸ்டார் ரகுவரன் மகன் யார் தெரியுமா தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க