ஜூலி எல்லாம் கதாநாயகியாயிடுச்சி நான் என்ன பாவம் செய்தனோ புலம்பும் நடிகர்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டதன் மூலம் அனைவராலும் அறியப்பட்ட ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அனைவராலும் போராளி என புகழப்பட்ட ஜூலியின் உண்மை முகத்தை வெளி உலகிற்கு படம் பிடித்து காட்டியது பிக் பாஸ் நிகழ்ச்சி.எதற்கும் சளைக்காத ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும்  பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக சேர்ந்தார்.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜூலிக்கு அடுத்த வாய்ப்பை சினிமாத்துறை வழங்கியது.தற்போது அவர் உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

அவர் சினிமாவில் நடித்துவருவது வெளியில்,கசிந்துமே வர குறித்த விமர்சனங்களும்,மீம்ஸ் களும் சமூகவலைத்தளங்களில் பரவலாக பரவத்தொடங்கியது.  

இந்த நிலையில்,இதுகுறித்து என்னம்மா ராமர் பேட்டியின்போது கூறுகையில், ஜூலியை கதா நாயகியாக ஆக்குகிறார்கள் என்றால் அந்த படத்தின் கதைக்கு தேவைப்பட்டிருக்கும் என்றார்.

அதுபோல்,என்னையும் கதாநாயகனாக வைத்து யாராவது படமெடுத்தால்   நல்லாத்தான் இருக்கும் என்றார்.சரி கதாநாயகியாக யாரை வைப்பீர்கள் என கேட்டதற்கு ,கீர்த்தி சுரேஷ் என்று சட்டென்று கூறினார்.

உடன்இருந்த வடிவேல் பாலாஜி கலாய்த்ததும், காமெடிக்காக கூறினேன் கதாநாயகனாகும் எண்ணம் எல்லாம் இல்லை, நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளார்.

எடப்பாடி அரசு டிஸ்மிஸ் விரைவில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வைரலாகும் புகைப்பட தொகுப்பு