எடப்பாடி அரசு டிஸ்மிஸ் விரைவில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வைரலாகும் புகைப்பட தொகுப்பு

சீக்கிரம் இந்த ஆட்சியை கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வாருங்கள், அவராவது நல்லா ஆளட்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் ஆதங்கத்தை ஆணித்தரமாக பதிவு செய்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, எரிபொருள் உயர்வால் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் உள்ளதாக கூறியுள்ளது. சிறந்த சேவையை தொடர்ந்து வழங்க கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என கூறியுள்ளது.

டீசல், உதிரி பாகங்கள், புதிய பேருந்துகளின் விலை உயர்வால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

சிறந்த சேவையை வழங்குகிறோம் என்று கூறுகிறீர்களே இதுதானா உங்கள் சிறந்த சேவை. பேசாமல் அமைச்சரவை மொத்தமாக பதவி விலகி விடுங்கள் என்று சில புகைப்படங்கள் அடங்கிய தொகுப்புடன் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த பலரும் ஆளும் அரசின் மீதான தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றன.

எதிர்கட்சியும், தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை அறிவித்து விட்டன.

தமிழக அளவில் மீண்டும் மிகப்பெரிய புரட்சி ஒன்று அரசுக்கு எதிராக வெடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ஆளும் அரசை மேலும் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.