அப்பா வயது ஹீரோவுடன் நெருக்கம் இளம் நடிகையை புறக்கணிக்கும் இயக்குனர்கள்

மும்பை: ஆமீர் கானுடன் நெருக்கமாக உள்ளதால் பாத்திமா சனா ஷேக்கிற்கு பட வாய்ப்புகள் இல்லையாம்.

தங்கல் படத்தில் ஆமீர் கானின் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். சாச்சி 420 படத்தில் கமல் ஹாஸனின் மகளாக நடித்தவர்.

தற்போது அவர் மீண்டும் ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருப்பவர் ஆமீர் கான். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாத அவர் தற்போது பாத்திமா சனா ஷேக்குடன் நெருக்கமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆமீர் கானும், பாத்திமா சனா ஷேக்கும் நெருக்கமாக பழகுவது அவரின் மனைவி கிரண் ராவுக்கு பிடிக்கவில்லை என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

பாத்திமா சனா ஷேக் வாய்ப்பு கேட்டு பல தயாரிப்பு நிறுவனங்களை அணுகி வருகிறாராம். ஆனால் அவர் ஆமீர் கானுடன் நெருக்கமாக இருப்பதால் யாரும் அவருக்கு வாய்ப்பு அளிக்க விரும்பவில்லையாம்.

தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் பாத்திமாவை பரிந்துரை செய்ததே ஆமீர் கான் தான். அந்த படத்தின் மற்றொரு நாயகியான கத்ரீனா கைஃபுக்கு பெரிதாக வேலை இல்லை என்று கூறப்படுகிறது.

தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் ஆமீர் பாத்திமாவை நடிக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை என்று பாலிவுட் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். பாத்திமா இனி ஆமீரின் படங்களை தவிர வேறு படங்களில் நடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.