எச்சரிக்கை அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்க உள்ளதா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனைகள் உண்டாகும்

தினமும் காலையில் வெந்நீர் குடிக்கும் பழக்கம் நல்லதுதான். ஒரு கிளாஸ் தண்ணீரை அரை கிளஸ்ஸாகும் படி காய்ச்சி அதில் எலுமிச்சை சேர்த்து குடித்தால் உடல்பருமன் குறையும்,சளித்தொல்லை நீங்கும் . 

வெந்நீருக்கு உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்கும் சக்தி உண்டு. இதை பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம்.அது உண்மைதான் அதை நாமும் பின்பற்றியிருப்போம். 

இது அனைத்தும் உண்மையாக இருந்த போதும் ஓரளவுக்கு மேல் வெந்நீர் குடிப்பதால் சில பக்க விளைவுகளும் உண்டாகத்தான் செய்கின்றன.

அப்படி அளவுக்கு அதிகமாக வெந்நீர் குடித்தால் என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் உண்டாகும் என்பதை பார்ப்போம்.

நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது.இதனாலயே ரத்தம் உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீராக கொண்டு செல்லப்படுகிறது.இந்த நிலையில், அதிகமாக சுடுதண்ணீர் குடிப்பதால் உடலில்  நீரோட்டத்தின் அளவு குறைகிறது.

அதிக சூட்டுடன் நீரைக் குடிப்பதால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.மேலும், சூடான நீரை குடிப்பதால் உடலின் உள்ளே இருக்கும் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படும்.

லிட்டர் கணக்கில் சூடு நீர் குடித்தாலும் தாகம் தீரவே தீராது. அதிக அளவில் சுடுதண்ணீர் குடித்தால்,அதுவும் குறிப்பாக இரவில் குடித்தால் சரியாக தூக்கம் வராது.

அதிக அளவில் வெந்நீர் குடித்தாலும், அளவுக்கு மீறிய சூடோடு அடிக்கடி குடித்து வந்தாலும் சிறுநீரகக் கோளாறு உண்டாகும்.மேலும் ரத்தத்தின் கன அளவு குறையும் வாய்ப்பு உண்டாகும்.

அது மட்டுமின்றி,எப்போதும் வெந்நீர் குடித்துவருவதால் அது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை அதிக அளவு நீர்மப்படுத்திவிடும்.

அதனால், தண்ணீரைப் பொருத்தவரையில் எப்போதும் அதிக குளிர்ச்சியாகவோ அல்லது அதிக சூடுடனோ குடிக்கக்கூடாது. வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லது தான். ஆனால் அது அளவோடும் மிதமான சூடோடும் இருக்க வேண்டும். 
 

விஜய்சேதுபதி போலீஸ் சிம்பு ரவுடி இது மணிரத்னம் ப்ளான்