அசைவம் சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் என்று தெரியுமா

இந்துக்களின் பாரம்பரியத்தின் படி அசைவம் சாப்பிட்ட நாளன்று கோவிலுக்குச் செல்லக் கூடாது என்று கூறுவார்கள். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த விதி பழக்கத்தில் இருந்து வருகிறது. கோயிலுக்குச் செல்வதாக இருந்தால் தலையுடன் குளித்துவிட்டு உடல் சுத்தமாகவும் மன சுத்தமாகவும்தான் செல்வார்கள்.

அசைவம் சாப்பிட்டால் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பதற்கான காரணத்தை நீங்கள் யோசித்தது உண்டா?
நாம் சாப்பிடும் உணவிற்கும் நம்முடைய மனதிற்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. எப்படியெனில் நாம் தயிர் சாதம் சாப்பிட்டால் தூக்க உணர்வை ஏற்படுத்தும். காரம் அதிகமாக இருக்கும் உணவை உட்கொண்டால் கோபம் வருவதைப் போன்ற உணர்வுகள் ஏற்படும்.

இதுதான் நாம் சாப்பிடும் உணவுக்கும் நம்முடைய உணர்வுக்கும் இடையேயான தொடர்பு.நாம் சாப்பிடும் அசைவ உணவுகள் ஜீரணம் ஆவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதால் அது மனதளவில் மந்த உணர்வுகளை ஏற்படுத்துகிறது.

எனவே மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சம சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து, அதன் மூலம் கிடைக்கவிருக்கும் சக்திகளையும் அடையாமல் போவார்.

அசைவ உணவுகள் சூட்சம சக்திகளை உணரும் ஆற்றலை குறைக்கும் தன்மை உடையவை ஆகும் என்பதால், எளிமையாக ஜீரணிக்கக் கூடிய சைவ உணவுகளை உட்கொண்ட பிறகு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும்.

ஒருவேளை நாம் அசைவ உணவுகளை உட்கொண்ட நாளில் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தால், சாப்பிட்ட பிறகு 3 முதல் 4 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

ஸ்ருதி ஹாசனின் இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா ஸ்ருதி ஏன் இவ்வாறு செய்கிறார்