பிரபல பத்திரிக்கை அட்டை படத்துக்காக பிந்து மாதவியின் அசத்தல் போட்டோ ஷூட்

பிந்து மாதவி

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், சிறுவயதில் இருந்தே பல நகரங்களில் வசித்தார்.

Bindhu Madhavi

வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

இப்படத்தைத் தொடர்ந்து கழுகு , கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், பசங்க 2, ஜாக்சன் துரை என்று பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் எண்ட்ரி ஆனார். படங்களில் நாயகியாக நடித்துக் கிடைத்த புகழைவிட ‘பிக் பாஸ்’ மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேமஸ் ஆனார் இவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் சினிமாவில் பிஸியாகிவிட்டனர். ஆனால் பிந்து மாதவி நல்ல கதைக்காக வெயிட் செய்தார். இயக்குனர்  கரு. பழனியப்பனின் கதை பிடித்துப் போக, அருள்நிதி  நடிக்கும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் பிரபல பத்திரிக்கை  அட்டை படத்துக்காக போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்பொழுது   பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Bindhu Madhavi

Bindhu Madhavi

Bindhu Madhavi

சசிகலா கம்பெனியில் சரக்கு வாங்கும் தமிழக அரசு சைலன்ட் டீல் பேசிய விவேக் சமாதானமான எடப்பாடி