தொகுப்பாளினி அஞ்சனா வெளியேற காரணம் இதுதான் வாழ்த்தும் ரசிகர்கள்

தொகுப்பாளினி அஞ்சனா:

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளராக சின்னத்திரையில் பயணித்தவர் விஜே அஞ்சனா. இவர் தொகுத்து வழங்கி வரும் நேரடி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவருடைய கலகலப்பான பேச்சும் அழகிய செய்கைகளும் பலருக்கும் பிடிக்கும்.

லைவ் ஷோக்கள் மட்டும் இன்றி பல இசைவெளியீட்டு விழாக்களையும், பல்வேறு நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானவர்.

திருமணம்:

'கயல்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கயல் சந்திரனை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 
திருமணம் செய்துக்கொண்ட இவர், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறி இருந்தார்.

திருமணத்திற்கு பின்பும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், நிகழ்ச்சி தொகுப்பிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் மூலம் முற்று புள்ளி வைத்துள்ளார்.

தொலைக்கட்சியில் இருந்து விலகல்:

கடந்த 10 ஆண்டுகளாக இவர் இந்த தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.

இவரின் இந்த முடிவிற்கு பலர் இவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அஞ்சனா தன்னுடைய  சொந்த விஷயத்திற்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

காரணம்:

இவருடைய இந்த திடீர் விலகல் குறித்து இவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுவது என்னவென்றால்.... திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்ததால் குடும்பத்தில் உள்ளவர்களை சரியாக கவனித்துக்கொள்ள முடியவில்லையாம்.

இதனால் தற்போது தன்னுடைய குடும்பத்திற்கு தன்னுடைய நேரத்தை செலவிட இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளராம் அஞ்சனா. 

வாழ்த்து:

இவருடைய இந்த முடிவிற்கு தொடர்ந்து பல ரசிகர்கள் வருத்ததுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

சசிகலா கம்பெனியில் சரக்கு வாங்கும் தமிழக அரசு சைலன்ட் டீல் பேசிய விவேக் சமாதானமான எடப்பாடி