சசிகலா கம்பெனியில் சரக்கு வாங்கும் தமிழக அரசு சைலன்ட் டீல் பேசிய விவேக் சமாதானமான எடப்பாடி

சசிகலாவின் உத்தரவுப்படி மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து கொள்முதலுக்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்ததும் கட்சியில் மட்டுமல்ல ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தை துரத்தியடித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிக்குடும்பத்திற்க்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்வதை குறைத்தது தமிழக அரசு.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா, தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு,அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அதனால், அடுத்த மாதத் தில் இருந்து, மிடாசில் இருந்து, மது வகைகள் வாங்குவதை முழுவதுமாக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.  மிடாஸ் நிறுவனம் வருமான வரி சோதனையில் சிக்கிய பின்னர் ஒட்டுமொத்தமாக கொள்முதலையே அரசு நிறுத்தியது. கடந்த சில மாதங்களாக மிடாஸ் மதுபான ஆலையின் வருமானம் மிக மோசமானது.

இதற்க்கு முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, டாஸ்மாக்கில், மிடாஸ் ஆதிக்கம் அதிகம் இருந்தது. மிடாஸ் மது வகைகளை, 'குடி'மகன்கள் விரும்பாத நிலையிலும், அதிகளவில் வாங்கப் பட்டு, வலுக் கட்டாயமாக விற்கப்படும். முதல்வர் பழனிசாமி, தினகரன் மோதல், டாஸ்மாக்கில் மிடாசின் ஆதிக்கத்தை குறைத்தது. சில மூத்த அமைச்சர்கள், மிடாசுக்கு ஆதரவாக இருந்ததால், மது கொள்முதலை நிறுத்த முடியவில்லை.

இத்தகவல்களை சசிகலா, இளவரசியின் கவனத்துக்கு விவேக் கொண்டு சென்றிருந்தார். இதனிடையே தினகரனின் சசிகலா குடும்பத்தில் உள்ள இளவரசி குடும்பத்தினருக்கும்  எடப்பாடி ஆட்சிக்கு எதிரான செயல்பாடுகளால் சசிகலா குடும்பம் அதிருப்தி அடைந்திருக்கிறது.

இந்த அதிருப்தியாய்  அடுத்த கட்டமாக மீண்டும் எடப்பாடி அரசு அமைச்சர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா, இளவரசியை அமைச்சர்கள் சிலர் சந்தித்தும் பேசியுள்ளனர். இந்த சந்திப்பை அடுத்து சசிகலா குடும்பத்தின் மீதுள்ள பிடியை தளத்தியுள்ளது தமிழக அரசு. இதன் வெளிப்பாடாக முதல் கட்டமாக மிடாஸில் இருந்து மீண்டும் மதுபான கொள்முதலை ஒப்புக் கொண்டிருக்கிறதாம் தமிழக அரசு. இதையெல்லாம் கேள்விப்பட்ட தினகரன் மீண்டும் இளவரசி குடும்பத்துடன் அடுத்த கட்ட மோதலை வெளிபடுத்துகிறாராம்.

உள்ளாடை இல்லாமல் வந்த பிரபல நடிகை பார்ட்டிக்கு வந்தவர்கள் ஷாக்