ஹபீஸ் சயீது சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும் செய்தித் தொடர்பாளர் ஹீதர் நுவர்ட்

பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாக்கிஸ்தான் அரசை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. 

அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் - உத் - தவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஹபீஸ் சயீது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். 2017 நவம்பரில் வீட்டுச் சிறையில் இருந்து அவன் விடுவிக்கப்பட்டான். 

இதையடுத்து அவனை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவன் மீது வழக்கு இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியாது என பாக்கிஸ்தான் கூறுகிறது.

சமீபத்தில் தனியார் 'டிவி'க்கு பேட்டி அளித்த பாக்கிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி பயங்கரவாதி சயீதை 'சார்' என்றும் 'சாஹிப்' என்றும் மரியாதைமிக்க வார்த்தைகளால் குறிப்பிட்டார். அப்போது 'ஹபீஸ் சயீதுக்கு எதிராக பாக்கிஸ்தானில் வழக்கு எதுவும் கிடையாது. வழக்கு இருந்தால் மட்டுமே யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்' என பாக்கிஸ்தான் பிரதமர் திட்டவட்டமாக கூறினார்.

இது பாக்கிஸ்தானிற்கு நிதியுதவி அளிக்கும் அமெரிக்காவை எரிச்சலடைய செய்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நுவர்ட் வாஷிங்டனில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது பயங்கரவாதி ஹபீஸ் சயீது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவன். ஐ.நா. பாதுகாப்பு குழுவின் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹபீஸ் சயீது இடம்பெற்றுள்ளான். அவனை சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாக்கிஸ்தானிடம் திட்டவட்டமாக கூறியுள்ளோம்.

ஹபீஸ் சயீது ஒரு பயங்கரவாதி. 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னால் மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ். எதிர்பார்ப்பு பயங்கரவாதிகள் தொடர்பான விவகாரத்தில் பாக்கிஸ்தான் அரசு கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இதை நிறைவேற்றாததால் பாக்கிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட ராணுவ நிதியுதவி நிறுத்தப்பட்டது. என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ''சர்வதேச குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சயீதின் முழு விபரங்கள் மற்றும் ஆதாரங்கள் இணையதளங்களில் கிடைக்கும். ''பாக்கிஸ்தான் அரசு கண்களை மூடிக்கொண்டு ஆதாரமில்லை எனக் கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ளது'' என்றார்.

விசுவாசம் அப்டேட் எப்போது வெளிவந்த தகவல்