சிறையில் ருத்ரதாண்டவம் ஆடிய சசிகலா அவசர அவசரமாக எழுதப்பட்ட எச்சரிக்கை கடிதம்

தமிழக அரசியலில் தற்போது சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் ஆளாளுக்கு தலைதூக்கி வரும் நிலையில் தனது குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அவர் எழுதிய கடிதத்தில் இனியும் எனது பேச்சை கேட்காவிட்டால் நீங்கள் பெற்றுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றதற்கு பின்னர் தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு அதிகரித்துள்ளது. டி.டி.வி.தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் தம்பி திவாகரன் மற்றும் அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தினசரி ஏதாவது ஒன்றை பேசியோ அல்லது சமூக வலைதளத்தின் மூலமாகவோ செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தினரின் இத்தகைய நடவடிக்கையானது தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் அ.தி.மு.க தொண்டர்களிடையேயும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சசிகலாவின் தம்பி திவாகரன் முன்னாள் முதல்வர் ஜெ., டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார் என்றும், அப்போது மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது என்றும் அந்த கழுகு அவருக்கு வேண்டியவருக்கு முதலமைச்சர் பதவியை வாங்கி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தது என்றும் கூறினார்.

திவாகரனின் இத்தகைய அதிரடி பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் கழுகு என திவாகரன் கூறியது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவைதான் என்றும் உளவுத்துறை ரிப்போர்ட் அளிக்க, சூடாகியுள்ளதாம். 

இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் பணியகம் என்ற ஒரு இயக்கத்தை பொங்கல் தினத்தன்று தொடங்கினார். அ.தி.மு.கவில் தற்போது இயங்கி வரும் இளம் பாசறையினைப் போன்ற ஒரு அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.

இந்த தகவலையெல்லாம் தனது வழக்கறிஞரின் மூலம் கேட்டறிந்த சசிகலா சிறையிலேயே ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். யாரைக்கேட்டு எல்லாரும் இப்படி ஆடுகிறார்கள்? என்ன நடக்கிறது வெளியே என்று இளவரசியிடம் பொறிந்து தள்ளியுள்ளார் சசிகலா.

இதனால் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது கணவர் நடராஜன், தம்பி, தம்பி மகன் மற்றும் டி.டி.வி.தினகரன் என்று அனைத்து உறவுகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து அனுப்பியுள்ளாரம். 

அந்தக் கடிதத்தில் மிகக் கடுமையான வார்த்தைகளை சசிகலா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மக்களின் மத்தியில் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இயக்கத்தை ஒரு குடும்பம் கைப்பற்றித் தற்போது தங்களது கட்டுக்குள் வைத்துக் கொண்டு இருப்பதாகவும், குடும்ப அரசியல் செய்துள்ள சசிகலா தமிழகம் முழுவதுமே ஊருக்கு ஒருவரை தலைமையாக்கி கட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது.

இதன் பின்னணியில்தான் வருமான வரித்துறை உள்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் சொல்வது போலவே ஆளாளுக்கு நீங்கள் இப்படி ராஜ்ஜியம் செய்து வந்தால் நான் காலம் முழுவதும் உள்ளேயே கிடக்க வேண்டியதுதான் என்று வேதனையை கொட்டி தீர்த்துள்ளார் சசிகலா.

இதற்காகவா நான் இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டேன் என்றும் நான் கட்டிய இந்த கோட்டையை நீங்களே சரிப்பது வேதனையாக இருக்கிறது என்றும் உருகியுள்ளாராம் சசிகலா.

எனவே இனிமேல் யாரும் தேவை இல்லாமல் மீடியாவை சந்திக்க வேண்டாம் என்றும் தேவையில்லாமல் யாரிடமும் எதையும் பேச வேண்டாம் என்றும் கட்டளையிட்டிருக்கிறாராம் சசிகலா.

இனியும் நீங்கள் நான் சொல்வதை கேட்கவில்லை எனில் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் நீங்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சசிகலா தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார். 

இந்தக் கடிதமானது சசிகலாவின் கணவர் நடராஜன், டி.டி.வி.தினகரன் மற்றும் திவாகரன் என்று சசியின் குடும்பத்தில் கோலோட்சும் முக்கிய நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தரித்திரம் நீங்கி லட்சுமி கடாஷம் பெருக இந்த பொருட்களை ஒருமுறையாவது தானம் செய்யுங்கள்