முட்டாள் ******** சூர்யாவை கலாய்த்த விஜேக்களை திட்டிய ஞானவேல்ராஜா

சென்னை: சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளை விளாசியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் சங்கீதா, நிவேதிதா ஆகியோர் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்துள்ளனர். இதையடுத்து திரையுலக பிரபலங்களும், சூர்யாவின் ரசிகர்களும் கோபம் அடைந்துள்ளனர்.

யாராக இருந்தாலும் உருவத்தை கிண்டல் செய்வது தவறு என்று தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஆர். பிரபு 
கோபம்

அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? @SunMusic என தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.


ஞானவேல் ராஜா 
விளாசல்

முட்டாள் ******** மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். கண்ணாடியை பார்த்து உங்கள் முகத்தில் நீங்களே துப்பிக் கொள்ளுங்கள் சங்கீதா, நிவேதிதா என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ட்வீட்டியுள்ளார்.


மன்னிப்பு 
வழக்கு

சூர்யாவை கிண்டல் செய்ததற்காக சங்கீதா, நிவேதிதா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் பெரிய பிரச்சனையாக்கி வழக்கு தொடரப்படும் என்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

மகிழ்ச்சி 
ரசிகர்கள்

ஞானவேல்ராஜா அந்த இரண்டு தொகுப்பாளினிகளை திட்டி ட்வீட் போட்டதை பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வா தலைவா உன்னை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்கின்றனர்.


உதவி 
படிப்பு

சூர்யா பல மாணவ, மாணவிகள் படிக்க உதவி செய்து வருகிறார். அவரின் உயரத்தை கிண்டல் செய்தவர்களுக்கு அவரின் நல்ல மனசு தெரியாது என்கிறார் ரசிகர் ஒருவர்.

நடுரோட்டில் நடிகருக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா வைரல் போட்டோ