சொந்த சேனல் தொகுப்பாளினிகள் என்றாலும் சூர்யாவுக்கு சப்போர்ட் பண்ணும் விஜே மணிமேகலை

சென்னை : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா அடுத்ததாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. தொகுப்பாளினிகளின் செயலுக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கே.வி.ஆனந்த் இயக்கும் 'சூர்யா 37' படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் தகவல்கள் வெளியாகின.

இதை வைத்து பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகள் இருவர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசினர். 'அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு... அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும்' என உயரத்தை கிண்டல் செய்தனர்.

இந்த நிகழ்வு சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விஷால், கருணாகரன், இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது, தொகுப்பாளினி மணிமேகலையும் சூர்யாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

தொகுப்பாளினிகளின் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்த, பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடன் வேலைப்பார்ப்பவர்கள் என்றாலும் தவறு தான் என்கிற ரீதியில், 'உயரம் முக்கியமில்லை, எந்த உயரத்தில் இருக்கின்றோம் என்பதே முக்கியம்' என்று ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

விஜே மணிமேகலையின் ட்வீட்டுக்கு சூர்யா ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மணிமேகலை சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலமானது கோஷ்டி மோதல் பன்னீர் பெயர் பொறித்த கல்வெட்டு உடைப்பு