அப்பல்லோவில் முகாமிட்ட அந்தக் கழுகு யார் யாரரைச் சொல்கிறார் திவாகரன்

மன்னார்குடி: ஜெயலலிதா மறைந்த போது அப்பல்லோவில் மத்திய அரசின் கழுகு ஒன்று இருந்ததாக போட்டுத் தாக்கியிருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன்.

ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 5.15 மணிக்கே மரணமடைந்துவிட்டார் என கொளுத்திப் போட்டிருக்கிறார் சசிகலா தம்பி திவாகரன். ஆனால் அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பு கருதி ஒருநாள் கழித்தே அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதா இறந்தார் என அறிவிக்கப்பட்டது எனவும் திவாகரன் கூறியுள்ளார்.

மன்னார்குடி விழா 
மத்திய அரசு மீது சாடல்

மன்னார்குடியில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள்விழாவில்தான் திவாகரன் இந்த உண்மைகளை போட்டுடைத்தார். அத்துடன் மத்திய அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் திவாகரன்.

மத்திய அரசின் கழுகு 
சிஎம் பதவிக்கு சிபாரிசு

இது தொடர்பாக குறிப்பிட்ட திவாகரன், மத்திய அரசின் கழுகு ஒன்று அந்த சமயத்தில் அப்பல்லோவில் இருந்தது. அவருக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தது.

பெயர் கூற முடியாது 
விமர்சிக்க கூடாது

அவர் உயர்ந்த பதவிக்கு சென்றுவிட்டதால் அவர் பெயரைக் கூறவும் முடியாது; அவரைபற்றி விமர்சிக்க கூடாது என பேசியிருக்கிறார் திவாகரன். இவர் பேசுவதைப் பார்த்தால் ஜெயலலிதா மறைந்த உடனேயே சசிகலா முதல்வராக முயற்சித்திருக்கிறார்; அதனை மத்திய அரசின் சோ கால்ட் கழுகுதான் தடுத்துவிட்டது என்பதுதான் அப்பட்டமாக தெரிகிறது.

ஓபிஎஸ் ராஜினாமா 
கூவத்தூர் கூத்து

இதனால்தான் முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து கூவத்தூர் கூத்துகளை சசிகலா குடும்பம் அரங்கேற்றியிருக்கிறது. ஆட்சி அதிகாரம் தங்களுக்குக் கிடைப்பதை மத்திய அரசு தடுத்துவிட்டதே என்கிற சசிகலா குடும்பத்தின் ஆதங்கம், விரக்திதான் திவாகரனின் பேச்சில் வெளிவந்துள்ளது

திருமண வாழ்வு கசந்த நிலையில் நடிகர் ஆர்யாவுடன் VJ ரம்யா செய்த வேலை வைரலாகும் வீடியோ